'என்ஜினில் திடீர் கோளாறு’.. மரத்தின்மீது லேண்டிங் செய்து உயிர் தப்பிய ‘கில்லாடி’ விமானி!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Arunachalam | Apr 26, 2019 05:57 PM

விமானத்தின் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக விமானத்தை மரத்தின் உச்சியில்  தரையிரக்கி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய விமானி.

plane crashed and landed at top of the 60 foot tree

அமெரிக்காவின் இடாஹோ மாகாணத்தில் உள்ள மெக்கால் (Mccall) எனும் பகுதியைச் சேர்ந்தவர் ஜான் கிரிகோரி. இவர் கடந்த திங்கட்கிழமை (22/04/2019) நள்ளிரவில் தன்னுடைய பைப்பர் கப் பி.ஏ-18 (Piper Cub PA-18) என்ற ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானத்தில் பயணித்த போது விமானத்தின் என்ஜின் திடீரென்று செயலிழந்தது.

இதையடுத்து அவரது விமானம் உயரமான மரங்கள் மிகுந்த பகுதியில் கீழே விழுந்ததில் அதிர்ஷ்டவசமாக ஜான் கிரிகோரியின் விமானம் 60 அடி உயர மரத்தின் உச்சியில் உள்ள கிளைகளில் சிக்கிக்கொண்டது. இதை சுதாரித்துக்கொண்ட விமானி ஜான் கிரிகோரி “911” என்ற அவசர உதவி எண்ணுக்கு தொடர்பு  கொண்டு தன் நிலைமையை எடுத்துரைத்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் உயரமான மரத்தில் சிக்கிக்கொண்ட விமானியை பத்திரமாக மீட்டு கீழே கொண்டுவந்தனர். எனினும் அவரது விமானம் மரத்தின் கிளையில் தொங்கியபடி நிற்கின்றது. அதனை எவ்வாறு மீட்பது என்று தெரியாமல் அதிகாரிகள் குழம்பியுள்ளனர்.

Tags : #PLANE CRASHED #60 FOOT TREE