‘கோலியை பார்த்து பயப்படக்கூடாது’!.. ‘அவர் விக்கெட் ரொம்ப முக்கியம்’.. ‘தைரியமா பந்து வீசுங்க’..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Dec 05, 2019 02:25 PM

விராட் கோலியை பார்த்து அதிகமாக பயப்படக்கூடாது என வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

West Indies coach suggestions on how to get Virat Kohli out

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை (06.12.2019) இரவு 7 மணிக்கு ஹைதராபாத் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் போட்டி குறித்து வெஸ்ட் இண்டீஸ் பயிற்சியாளர் அளித்த பேட்டியில், ‘இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் விக்கெட் முக்கியமானது. அவரை அவுட் செய்வது அவ்வளவு எளிதல்ல என்பது எங்களுக்கு தெரியும். ஆனால் அவரை பார்த்து எங்களது பந்துவீச்சாளர்கள் அதிகமாக பயப்படக்கூடாது. தைரியமாக பந்து வீச வேண்டும். கடந்த ஆண்டு இந்தியாவில் டி20 மற்றும் ஒருநாள் போட்டியில் விளையாடினோம். அதில் ரொம்ப மோசமாக ஆடவில்லை, ஒரு ஆட்டத்தை சமன் செய்தோம். இந்த அனுபவத்தை எங்களது வீரர்கள் பயன்படுத்திக் கொள்வார் என நம்புகிறேன். கடந்த வருடத்தை விட இந்த முறை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனென்றால் இந்தியாவை சொந்த மண்ணில் சாய்ப்பது என்பது அவ்வளவு எளிதல்ல’ என பேசியுள்ளார்.

Tags : #VIRATKOHLI #BCCI #CRICKET #INDVWI #T20 #TEAMINDIA