"அட, சொன்ன மாதிரியே டி 20 WORLD CUP'க்கும் செலக்ட் ஆயிட்டாரே!!".. உற்சாகத்தில் ரசிகர்கள்.. "இந்த தடவ மிஸ்ஸே ஆகாது"..
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐக்கிய அரபு அமீரகத்தில் வைத்து ஆசிய கோப்பை சமீபத்தில் நடந்து முடிந்த நிலையில், இலங்கை அணி ஆறாவது முறையாக கோப்பையைக் கைப்பற்றி அசத்தி இருந்தது.
முன்னதாக, ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணி, சூப்பர் ஃபோர்ஸ் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டிருந்த நிலையில், அடுத்தடுத்து தோல்விகள் காரணமாக இறுதி போட்டிக்கு முன்னேறாமல் வெளியேறி இருந்தது.
இதனையடுத்து, ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே டி 20 தொடரில் இந்திய அணி மோத உள்ளது. இதற்கு அடுத்தபடியாக, டி 20 உலக கோப்பையும் ஆஸ்திரேலியாவில் வைத்து அக்டோபர் 16 ஆம் தேதி ஆரம்பமாகிறது.
இதற்காக அனைத்து அணிகளும் மிகவும் மும்முரமாக தயாராகி வரும் நிலையில், உலக கோப்பைக்கான வீரர்கள் பட்டியலையும் தங்களின் வீரர்களை அறிவித்து வருகின்றனர். அந்த வகையில், ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ தற்போது அறிவித்துள்ளது. இதில், கே எல் ராகுல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஆசிய கோப்பையில் இடம் பிடித்த வீரர்கள் பெரும்பாலானோரும் டி 20 உலக கோப்பையில் இடம்பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக, தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் டி 20 உலக கோப்பையில் இடம்பிடித்திருப்பது சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. இவர் ஆசிய கோப்பையிலும் இந்திய அணிக்காக களமிறங்கி இருந்தார்.
மேலும், காயத்தால் ஆசிய கோப்பையில் இருந்து விலகி இருந்த பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் ஆகியோர், மீண்டும் டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும், Standby வீரர்களாக முகமது ஷமி, ஷ்ரேயாஸ் ஐயர், ரவி பிஷ்னோய் மற்றும் தீபக் சாஹர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்திய அணிக்கு ஒரு சிறிய சிக்கலாக ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா உலக கோப்பை அணியில் இடம்பெறாதது அமைந்துள்ளது. இவர் ஆசிய கோப்பை நடுவே காயம் காரணமாக விலகி இருந்தது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்பட்டது. அப்படி ஒரு சூழ்நிலையில், காயம் காரணமாக டி 20 உலக கோப்பை தொடரில் இருந்தும் விலகி உள்ளார்.
டி 20 உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் :
ரோஹித் ஷர்மா (கேப்டன்), கே எல் ராகுல் (துணை கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், தீபக் ஹூடா, ரிஷப் பந்த், தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்டியா, R அஸ்வின், Y சாஹல், அக்சர் படேல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், அர்ஷ்தீப் சிங்