“அதுக்கான நேரம் வந்திருச்சு”.. IPL-ல் பட்டைய கிளப்பும் நடராஜன்.. முன்னாள் இந்திய கேப்டன் ஓபன் டாக்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய கிரிக்கெட் அணியில் மீண்டும் நடராஜன் இடம் பிடிக்க வேண்டும் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழக கிரிக்கெட் வீரரான நடராஜன், ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக பாதியிலேயே நடராஜன் விலகினார். அதன் பின்னர் தீவிர பயிற்சிகள் மேற்கொண்டு தன்னை தயார்படுத்திக் கொண்ட அவர் நடப்பு ஐபிஎல் தொடரில் அசத்தி வருகிறார்.
இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள நடராஜன் 15 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதனால் அதிக விக்கெட்டுகள் எடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 3 ஓவர்கள் வீசிய நடராஜன் 10 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இந்த சூழலில் ஐபிஎல் தொடர் முடிந்த பின், வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக்கோப்பை நடைபெற உள்ளது. தற்போது நடராஜன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் நடராஜன் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில், யார்க்கர்கள் வீசுவதில் நடராஜன் சிறந்தவர் என்பதை நாம் அனைவரும் அறிந்ததுதான். தற்போது அவரது ஆட்டத்தை திரும்பிப் பார்ப்பது நல்லது. ஏனென்றால் சில நேரம் இந்திய கிரிக்கெட் அவரை இழந்தது போல் உள்ளது. அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது நல்லது. 16 முதல் 20-வது ஓவருக்கு இடையில் அவரது பந்துவீச்சு பேட்ஸ்மேன்களை திணறடிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். கடந்த ஆண்டு நடராஜன் சரியாக விளையாடவில்லை என்றாலும், தற்போது அவர் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். அப்போது அவருக்கு காயங்கள் இருந்தன. இப்போது அவர் புத்துணர்ச்சியுடனும், விளையாட தயாராகவும் இருக்கிறார்’ என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8