"சும்மா இருந்தவங்கள நோண்டுனா இது தான் நடக்கும்.." 'இந்திய' ரசிகர்களை வம்பிழுத்த 'வீடியோ'.. தாறுமாறாக 'பதிலடி' கொடுத்த ரசிகர்கள்!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | May 11, 2021 10:54 PM

இங்கிலாந்து அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (James Anderson). 38 வயதாகும் இவர், இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 614 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார்.

indian fans reply to barmy army cheeky tweet gone viral

இங்கிலாந்து அணி வீரர்களில், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகம் விக்கெட்டுகளை எடுத்த வீரர் என்ற பெருமையுடன் வலம் வரும் ஆண்டர்சன், சமீபத்தில் இந்தியாவிற்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் தொடரில், 3 போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகள் மட்டுமே கைப்பற்றியிருந்தார்.

இந்நிலையில், இந்த தொடரில் ஆண்டர்சன் குறித்த வீடியோ ஒன்று தான், தற்போது இந்திய ரசிகர்களை சற்று கடுப்பில் ஆழ்த்தியுள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு ஆதரவாகவுள்ள அந்த நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் பக்கம் ஒன்று, ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை சென்னை மைதானத்தில் வைத்து ஆண்டர்சன் விக்கெட் எடுக்கும் வீடியோவை பதிவிட்டுள்ளது.

மேலும், இந்த வீடியோவில், 'ஆண்டர்சனை 'Clouderson' எனக் கூறும் இந்திய ரசிகர்களுக்கு இந்த வீடியோ' என நக்கலாக குறிப்பிட்டுள்ளது. ஆண்டர்சன் என்ன தான் அதிக விக்கெட்டுகளை எடுத்திருந்தாலும், அவர் நன்கு தெரிந்த பிட்ச்கள் மற்றும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலைகளில் தான் சிறப்பாக செயல்படுவார் என 'Clouderson' என சிலர் குறிப்பிடுவர்.

 

இதனைக் குறிப்பிட்டு, இந்திய மைதானங்களிலும் ஆண்டர்சன் பந்துகள் ஸ்விங் ஆகும் என்பதை, ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை அவுட் எடுத்த வீடியோவை வைத்து, அந்த ட்விட்டர் பக்கம் குறிப்பிட்டிருந்தது. இந்திய ரசிகர்களை  வம்பிழுக்கும் வகையில், இந்த வீடியோவை அவர்கள் பதிவிட்ட நிலையில், இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் வேற லெவலில் பதிலடி கொடுத்தனர்.

 

ரஹானே மற்றும் சுப்மன் கில் ஆகியோரை அவுட் எடுத்த அதே தொடரில், இந்திய வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant), ஆண்டர்சனின் பந்தை, ரிவர்ஸ் ஸ்கூப் மூலம் பவுண்டரியாக மாற்றினார். கிரிக்கெட் உலகின் சிறந்த பவுலரான ஒருவரின் ஓவரில், எந்தவித பயமுமின்றி, ரிவர்ஸ் ஸ்வீப்பில் பண்ட் அடித்த ஷாட், வேற லெவலில் அந்த சமயத்தில் வைரலாகியிருந்தது.

 

இந்த வீடியோவை தற்போது குறிப்பிட்ட இந்திய ரசிகர்கள், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ட்விட்டர் பக்கம் வெளியிட்ட வீடியோவிற்கு பதிலடியாக தெரிவித்தும், அதிகம் கிண்டல் செய்தும் வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Indian fans reply to barmy army cheeky tweet gone viral | Sports News.