"அந்த ஒருத்தரு மட்டும் இல்லாத 'இந்தியா' டீம... என்னால நெனச்சு கூட பாக்க முடியல..." 'இளம்' வீரரால் பிரம்மித்து போன 'இயான் பெல்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளிடையே நடைபெற்ற டெஸ்ட் தொடர், டி 20 மற்றும் ஒரு நாள் தொடர் என அனைத்தையும் இந்திய அணி கைப்பற்றி அசத்தியுள்ளது.

முன்னதாக, நேற்று நடைபெற்ற கடைசி ஒரு நாள் போட்டியின் போது, இந்திய வீரர் ரிஷப் பண்ட் (Rishabh Pant), அதிகபட்சமாக 78 ரன்கள் எடுத்து அசத்தினார். கடந்த ஆஸ்திரேலிய தொடரில் இருந்தே, அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும், இந்திய அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்து வரும் ரிஷப் பண்ட், நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து வருகிறார்.
இங்கிலாந்து தொடரிலும், மிகச் சிறப்பாக ஆடிய ரிஷப் பண்டிற்கு முன்னாள் வீரர்கள் இன்சமாம் உல் ஹக், மைக்கேல் வாகன் உள்ளிட்ட பலர் பாராட்டுக்களைத் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரரான இயான் பெல் (Ian Bell), ரிஷப் பண்ட்டின் ஆட்டத்தைக் கண்டு பிரம்மித்து போயுள்ளார்.
'மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டி தொடரிலும், மிக அற்புதமான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிப்படுத்தியுள்ளார். பேட்டிங் செய்யும் போது, மிக கவனமாக ஒவ்வொரு ஷாட்களையும் அடித்து ஆடி வருகிறார். மேலும், டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த சதம், அதிக தன்னம்பிக்கையை அவருக்குள் விதைத்துள்ளது.
ரிஷப் பண்ட் இல்லாத ஒரு இந்திய அணியை நினைத்து கூட என்னால் பார்க்க முடியவில்லை. சில உலகம் தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரர்களை போல, ரிஷப் பண்ட் ஆடுவதை என்னால் உணர முடிகிறது. இப்போதுள்ள காலக்கட்டத்தில், அதிக முதிர்ச்சியுடன் ஆடும் அரிய வீரர்களில் ஒருவராக, ரிஷப் பண்ட்டை நான் பார்க்கிறேன்.
எதுவாக இருந்தாலும், இது அவரது பயணத்தின் தொடக்கமாகும். வெற்றிகரமான ஒரு கிரிக்கெட் பயணத்தை அவர் நிச்சயம் மேற்கொள்வார்' என இயான் பெல், ரிஷப் பண்ட்டிற்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

மற்ற செய்திகள்
