"இவர மாதிரி 'ஆடணும்'ன்னு ஆசையா இருக்கு.. ப்பா, கண்ணுல கொஞ்சம் கூட 'பயமில்ல'.." 'இந்திய' வீரரை புகழ்ந்து தள்ளிய 'கம்மின்ஸ்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெஸ்ட் கிரிக்கெட்டில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில், நம்பர் 1 இடம் வகிக்கும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ், நாளை முதல் ஆரம்பமாகவுள்ள ஐபிஎல் தொடரில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடவுள்ளார்.
இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் ஒருவரை வேற லெவலில் புகழ்ந்து, அவரை போல தானும் ஆட வேண்டும் என ஆசைப்படுவதாக விருப்பமும் தெரிவித்துள்ளார். 'ஒரு கிரிக்கெட் வீரராக இல்லாமல், ரசிகராக இருந்து, நாம் மற்ற வீரர்களை பார்க்கும் போது, மற்ற அனைத்து வீரர்களையும் விட, முற்றிலும் மாறுபட்ட விளையாட்டை ஒருவர் ஆடும் பட்சத்தில், நாம் அதனை ரசிக்க விரும்புவோம்.
அவர்கள் கொஞ்சம் கூட பயமில்லாமல் ஆடுவதை நாம் பார்க்கும் போது, அதனைப் போல நாமும் பயமின்றி, தைரியமின்றி ஆட விரும்புவோம். சமீபத்தில் நடந்து முடிந்த தொடர்களை வைத்து பார்க்கும் போது, அப்படி ஆடும் ஒருவர் வீரர் யார் என்றால், நான் ரிஷப் பண்ட்டை தான் கை காட்டுவேன்.
மற்ற 50 வீரர்கள் ஒரே மாதிரி ஆடிக் கொண்டிருக்கும் போது, ரிஷப் பண்ட் மட்டும் தனியாக, தன்னுடைய ஸ்டைலில், கொஞ்சம் கூட பயமின்றி அதிரடியாக ஆடுகிறார். அவரின் ஆட்டத்தைப் பார்க்கும் போது, எப்போதும் ரசிக்கவே தான் தோன்றுகிறது' என பண்ட்டை பாராட்டிக் கருத்து தெரிவித்துள்ளார்.
டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகியதால், அவருக்கு பதிலாக ரிஷப் பண்ட்டை டெல்லி அணியின் கேப்டனாக சமீபத்தில் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.