‘தொப்பிய இப்டியா போடுவாங்க’.. பிராவோவுக்கு கத்துதரும் ஜிவா தோனியின் க்யூட் வீடியோ!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Apr 14, 2019 09:42 PM

சென்னை அணியின் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தோனியுடன் பிராவோ விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

WATCH: Ziva Dhoni\'s cute video goes viral

ஐபிஎல் டி20 லீக்கின் 29 -வது போட்டி இன்று(14.04.2019) கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியும் மோதின.

இதில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பௌலிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் கொல்கத்தா அணி பேட்டிங் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்கார்களாக க்றிஸ் லின் மற்றும் சுனில் நரேன் களமிறங்கினர். இதில் சுனில் நரேன் 2 ரன்களில் அவுட்டாகி வெளியேறினார். இதனை அடுத்து ஜோடி சேர்ந்த நிதிஷ் ராணா மற்றும் க்றிஸ் லின் கூட்டணி நிதானமாக விளையாட ஆரம்பித்தது. 20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்மாக க்றிஸ் லின் 82 ரன்கள் அடுத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து 162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. 19.4 ஓவர்களின் முடிவில் 162 ரன்கள் எடுத்து சென்னை அணி வெற்றி பெற்றது. இதில் சுரெஷ் ரெய்னா 58 ரன்களும், ஜடேஜா 31 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

போட்டி முடிந்த பின்னர் ஜிவா தோனியுடன் பிராவோ விளையாடும் க்யூட்டான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags : #IPL2019 #IPL #MSDHONI #ZIVADHONI #BRAVO #WHISTLEPODU #YELLOVE #KKRVCSK