‘இப்போ தான் ஒரு மேட்ச் ஜெயிச்சிருக்காரு அதுக்குள்ள சோதனையா’.. கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் வைத்த அதிரடி செக்!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Apr 14, 2019 07:07 PM
ஐபிஎல் நிர்வாகம் விராட் கோலிக்கு 12 லட்சம் அபாராதம் விதித்து அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

ஐபிஎல் டி20 லீக்கின் 28 -வது போட்டி நேற்று(13.04.2019) மொகாலியில் நடைபெற்றது. இதில் கோலி தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின.
தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்த பெங்களூரு அணி இப்போட்டியில் பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்தது. இதில் கேப்டன் கோலி 67 ரன்களும், ஏபி டிவில்லியர்ஸ் 59 ரன்களும் எடுத்தனர்.
இந்நிலையில் இந்த போட்டியில் பெங்களூரு அணிக்கு கொடுக்கப்பட்ட நேரத்திற்குள் தங்களது 20 ஓவர்களை வீசி முடிக்கவில்லை. அதனால் அதிக நேரம் பந்து வீச எடுத்துக்கொண்ட காரணத்திற்காக பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலிக்கு ஐபிஎல் நிர்வாகம் 12 லட்சம் ரூபாயை அபராதமாக விதித்துள்ளது.
