இதுவர எந்த 'டீம்'க்கும் இப்டி நடந்ததில்ல... 'இந்தியா'க்கு தான் 'ஃபர்ஸ்ட்'... 'ஆஸ்திரேலிய' தொடரில் வந்த 'சோதனை'!!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி இன்று ஆரம்பமான நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது.
முன்னதாக, இந்த தொடர் முழுவதும் இந்திய அணிக்கு பல சிக்கல்கள் காத்திருந்தது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி, முதல் டெஸ்ட் போட்டியுடன் இந்தியா திரும்பிய நிலையில், அதன் பிறகு வேகப்பந்து வீச்சாளர்கள் ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் காயம் காரணமாக தொடரில் இருந்து பாதிலேயே விலகினர்.
அதனைத் தொடர்ந்து கே.எல். ராகுல், ஜடேஜா, அஸ்வின், ஹனுமா விஹாரி, பும்ரா ஆகியோர் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் அனுபவமில்லாத இளம் வீரர்களை கொண்டு இந்திய அணி இன்று களமிறங்கியது.
இந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி மொத்தம் 20 வீரர்களை பயன்படுத்தியுள்ளது. ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளியே நடைபெறும் டெஸ்ட் தொடரில் அதிக வீரர்கள் பயன்படுத்தப்பட்டது இந்த முறை தான். அது மட்டுமில்லாமல் 5 வீரர்களை இந்த தொடரில் இந்திய அணி அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 4 போட்டிகளிலும் களமிறங்கிய இரண்டு பேர் புஜாரா மற்றும் ரஹானே தான்.
இந்தாண்டு முழுவதும் இந்திய அணிக்கு தொடர்ந்து கிரிக்கெட் தொடர்கள் நடக்கவுள்ள நிலையில், முன்னணி வீரர்கள் காயத்தால் அவதிப்பட்டு வருவது இந்திய அணிக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.