நேற்று நீ செய்த 'பாவங்கள்' அனைத்துமே... 6 மாச பகைக்கு 'பழிதீர்த்துக்' கொண்ட வீரர்... 'மீம்ஸ்' போட்டு தெறிக்க விடும் ரசிகர்கள்!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Manjula | Jan 29, 2020 08:42 PM

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது டி20 போட்டி ஹாமில்டனில் இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 179 ரன்களை குவித்தது.

IND Vs NZ: Rohit Sharma\'s sweet revenge to New Zealand

இதையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு மார்ட்டின் குப்தில் நல்ல தொடக்கம் தந்தார். ஆனால் விரைவில் அவரும் அவுட்டாகி விட, கேப்டன் கனே வில்லியம்சன் தனியாக அணியை கரைசேர்க்கும் முயற்சியில் இறங்கினார். ஆனால் கடைசி நேரத்தில் வீறுகொண்டு எழுந்த இந்திய அணி 20-வது ஓவரின் 3-வது பந்தில் அவரை அவுட் செய்து 95 ரன்களுக்கு வெளியேற்றியது.

இதையடுத்து 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்து போட்டியை டிரா செய்தது. தொடர்ந்து நடந்த சூப்பர் ஓவரில் நியூசிலாந்து 17 ரன்கள் எடுத்தது. 18 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, ரோஹித் சர்மாவின் அதிரடி சிக்ஸர்களால் 19 ரன்கள் எடுத்து திரில் வெற்றி பெற்றது.

தற்போது 5 டி20 போட்டிகளைக் கொண்ட இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியின் வழியாக நியூசிலாந்து நாட்டில் டி20 தொடரை வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற பெருமை விராட் கோலிக்கு கிடைத்துள்ளது. இன்றைய போட்டியில் ரோஹித் சர்மாவின் அதிரடியால் இந்திய அணி வெற்றி பெற்றது.

இதைக்கண்ட இந்திய ரசிகர்கள் உலகக்கோப்பை அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்து ரோஹித் சர்மா கண்ணீர் விட்டதற்கு, இன்று அவர் பழி தீர்த்துக் கொண்டதாக மீம்ஸ்கள் போட்டு இந்திய அணியின் வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.