‘அந்த 2 நாடுகளுக்கும் ஓ.கே.’... ‘இந்தியாவிலும் அவசரகால அனுமதிக்கு’... முதன்முதலாக விண்ணப்பித்த நிறுவனம்’...!!!
முகப்பு > செய்திகள் > இந்தியாஇந்தியாவில் கொரோனா தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி கோரி, முதன்முதலாக இந்திய மருத்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
![Pfizer seeks approval for emergency use in India after UK, Bahrain Pfizer seeks approval for emergency use in India after UK, Bahrain](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/india/pfizer-seeks-approval-for-emergency-use-in-india-after-uk-bahrain.jpg)
இந்த ஆண்டு முழுவதையும் தனத பிடிக்குள் வைத்திருந்த கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகள் தயாரிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி விட்டன. தடுப்பூசிகளை தயாரித்து வரும் பல நாடுகள் அவற்றை இறுதிக்கட்ட சோதனைகளில் இருக்கும்போதே, அவசர தேவைக்கு பயன்படுத்தவும் தயாராகி வருகின்றன.
இதனால் கொரோனா முற்றுப் பெறுவதற்கான கனவை உலக நாடுகள் காணலாம் என உலக சுகாதார அமைப்பும் கூறியுள்ளது. இந்தியாவிலும் 3 தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனைகளில் இருக்கின்றன. அத்துடன் பல்வேறு வெளிநாட்டு தடுப்பூசிகளும் பரிசோதனை மற்றும் தயாரிப்பில் உள்ளன. இந்தியாவின் தடுப்பூசி தயாரிக்கும் பணிகளை மத்திய அரசு தீவிரமாக கண்காணித்தும், ஊக்கப்படுத்தியும் வருகிறது.
இந்தநிலையில் தனது கொரோனா தடுப்பூசிக்கு இந்தியாவில் அவசர கால பயன்பாட்டுக்கான அனுமதியை வழங்குமாறு ஃபைசர் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. இதற்காக தலைமை மருந்து கட்டுப்பாட்டாளரிடம் ஃபைசரின் இந்திய பிரிவு சமர்ப்பித்த விண்ணப்பத்தில், தடுப்பூசியை அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்து இந்தியாவில் விற்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதிய சட்டங்களின் அடிப்படையில், இந்தியாவில் கிளினிக்கல் சோதனைகளை நடத்தாமலேயே தடுப்பூசியை விற்க அனுமதிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. ஃபைசர் மற்றும் பயோன்டெக் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த தடுப்பூசிக்கு கடந்த 2 ஆம் தேதி இங்கிலாந்தும், அதைத் தொடர்ந்து 4 ஆம் தேதி பஹ்ரைனும் அவசர அனுமதி வழங்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)