"இந்த மாதிரி கஷ்டமான நேரத்துல, 'கோலி'ய உதாரணமா வெச்சு கடந்து வரணும்.." 'இளம்' வீராங்கனை வீட்டில் நடந்த 'துயரம்'.. தந்தை கொடுத்த 'மனவலிமை'.. நெகிழ வைக்கும் 'சம்பவம்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியாவில் தற்போது கொரோனா தொற்றின் இரண்டாம் அலை மிகவும் தீவிரமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும், பாதிப்புகளும் நாளுக்கு நாள் உச்சம் தொடுவதால், ஆக்சிஜன் மற்றும் இதர மருத்துவ உபகரணங்களின் தட்டுப்பாடுகளும் அதிகரித்து வருகிறது.
![i inspired priya by giving virat as example says her father i inspired priya by giving virat as example says her father](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/i-inspired-priya-by-giving-virat-as-example-says-her-father.jpg)
இந்த கொடிய தொற்றின் காரணமாக, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி வீராங்கனை பிரியா புனியா (Priya Punia), சில தினங்களுக்கு முன்பு தனது தாயை இழந்தார். தான் கிரிக்கெட் ஆட வேண்டும் என்பதில் அதிக ஆர்வத்துடன் இருந்த தாயின் இழப்பு, பிரியாவை வெகுவாக பாதித்தது.
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரின் மகளிர் இந்திய அணியில், பிரியாவும் இடம்பெற்றிருந்தார். இதற்காக, அவர் தயாராகிக் கொண்டிருந்த போது தான், தாயின் இறப்பு செய்தி அவருக்கு தெரிய வந்தது. அவருக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில், பிரியா இங்கிலாந்து தொடரில் பங்கேற்பாரா என கேள்வியும் அதிகம் நிலவியது.
இந்நிலையில், தாய் இறந்த இரண்டே நாட்களில், கிரிக்கெட் ஆட தயாராகி விட்டார் பிரியா புனியா. ஜூன் மாதம் முதல், இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து, கிரிக்கெட் தொடரில் இந்திய மகளிர் அணி பங்கேற்கவுள்ள நிலையில், இதற்காக, மும்பையில் ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ பபுளில், சமீபத்தில் இணைந்தார் பிரியா. அவரின் மன வலிமையை ரசிகர்கள் அதிகம் பாராட்டி வரும் நிலையில், மகளின் முடிவு குறித்து, அவரது தந்தை சுரேந்திரா விளக்கமளித்துள்ளார்.
'ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டதால், எனது மனைவியைக் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. அதன் பிறகு, இங்கிலாந்து தொடரும் நெருங்கியதால், எனது மகளை நானே ஊக்கப்படுத்தினேன்.
நான் அவளிடம், "விராட் கோலி தனது தந்தையின் மறைவுக்கு பிறகு ரஞ்சி டிராபி ஆடச் சென்றார். அதனை மனதில் நினைத்துக் கொள். இது நமக்கு மிகவும் கடினமான நேரம். ஆனால், நாம் மன ரீதியாக வலுவாக இருக்க வேண்டும். வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களில், சவால்களை எதிர்த்து நாம் போராட வேண்டியிருக்கும்" என அறிவுறுத்தினேன்.
நான் சொன்னதை புரிந்து கொண்ட பிரியா, இந்திய அணிக்காக ஆட, நான் தயாராகி விட்டேன் என என்னிடம் கூறினார்' என தனது மகளின் மன வலிமை குறித்து சுரேந்திரா பேசினார்.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)