"அப்படி எத பாத்துட்டு இப்டி 'ஷாக்' ஆகுறாங்க??.. 'ரோஹித்' மனைவி கொடுத்த 'ரியாக்ஷன்'.. குழம்பிய 'ரசிகர்கள்'.. 'மும்பை' அணி உடைத்த 'சீக்ரெட்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுரோஹித் ஷர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனில், தங்களது முதல் போட்டியில் பெங்களூர் அணியிடம் தோல்வி அடைந்திருந்த நிலையில், கொல்கத்தா அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அசத்தல் வெற்றி கண்டிருந்தது.

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 152 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய கொல்கத்தா அணியில், தொடக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால், அவர்கள் அவுட்டாக, இறுதியில் கொல்கத்தா அணி தடுமாறியது. மும்பை பந்து வீச்சாளர்கள், அற்புதமாக பந்து வீசி நெருக்கடி கொடுத்து, 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியையும் சொந்தமாக்கியது.
இதனிடையே, இந்த போட்டியில் மைதானத்தில் இருந்து மும்பை அணிக்கு ஆதரவளித்த ரோஹித் ஷர்மாவின் மனைவி ரித்திகா (Ritika Sajdeh) மற்றும் ஹர்திக் பாண்டியாவின் மனைவி நடாஷா ஸ்டான்கோவிக் (Natasa Stankovic) ஆகியோர், போட்டியை ரசித்துக் கொண்டிருந்தனர். அப்போது, நடாஷாவின் மொபைல் போனில் எதையோ பார்த்து விட்டு, ஆச்சரியத்தில் ரித்திகா உறைந்து நிற்கும் புகைப்படம் ஒன்று அதிகம் வைரலானது.
ரித்திகா எதைப் பார்த்து இப்படி ரியாக்ஷன் கொடுத்தார் என்பது பற்றி ரசிகர்கள் பல விதமான கேள்விகளை எழுப்பினர். அது மட்டுமில்லாமல், பல விதமான பதில்களையும் ரசிகர்கள் இது பற்றி குறிப்பிட்டு வந்தனர்.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணி, தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ரித்திகா மற்றும் நடாஷா ஆகியோர் அப்படி என்ன மொபைலில் பார்த்து உறைந்து போயினர் என்பதற்கான விடையை கூறியுள்ளது.
கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், ரோஹித் ஷர்மா (Rohit Sharma) ஒரு ஓவர் பந்து வீசினார். ரோஹித் பந்து வீசுவார் என்பதை ரசிகர்கள் உள்ளிட்ட யாரும் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை. இதனால், ரோஹித் பவுலிங் போடுவதை பார்த்து தான், ரித்திகா மற்றும் நடாஷா ஆகியோர் ஆச்சர்யத்தில் உறைந்து போனார்கள் என மும்பை இந்தியன்ஸ் அணி பதில் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் தொடரின் ஆரம்ப சீசன்களில், ரோஹித் ஷர்மா பந்து வீசி சில விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
