சைலண்டாக இருந்த ஆடியன்ஸ்.. சிக்னல் கொடுத்த ஹர்திக்.. அடுத்த பந்திலேயே நடந்த வைரல் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்து அணிக்கு எதிராக டி 20 உலக கோப்பைத் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்து வெளியேறியது ரசிகர்கள் மத்தியில் கடும் வேதனையை ஏற்படுத்தி இருந்தது.
Also Read | பறிபோன Finals வாய்ப்பு.. ஒரே ஒரு எமோஜி போட்டு KL ராகுல் பகிர்ந்த ஃபோட்டோ!!
கடந்த ஆண்டு டி 20 உலக கோப்பைத் தொடரில் லீக் சுற்றுடன் இந்திய அணி வெளியேறி இருந்த நிலையில், பலம் வாய்ந்த அணியாகவும் நடப்பு உலக கோப்பைத் தொடரில் களமிறங்கி இருந்தது.
சூப்பர் 12 சுற்றில் தங்கள் பிரிவில் முதலிடம் பிடித்திருந்த இந்திய அணி, தங்களின் அரையிறுதி போட்டியில் நேற்று (10.11.2022) இங்கிலாந்து அணியை சந்தித்திருந்தது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 168 ரன்கள் எடுத்திருந்தது. கடைசி கட்டத்தில் ஹர்திக் பாண்டியா அதிரடி காட்ட இந்திய அணி சிறந்த ஸ்கோரை எட்டி இருந்தது. இதனைத் தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜோஸ் பட்லர் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் சேர்த்தனர்.
அவர்களின் பார்ட்னர்ஷிப்பை உடைக்க இந்திய அணி பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் பலனளிக்காமல் போனது. ஓவருக்கு பத்து ரன்கள் வீதம் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் உயர்ந்து கொண்டே இருக்க, முழுக்க முழுக்க போட்டியும் அவர்களின் கட்டுப்பாட்டில் தான் இருந்தது. இதனால், ஒரு விக்கெட்டை கூட இழக்காமல் 16 ஆவது ஓவரிலேயே இலக்கை எட்டியது இங்கிலாந்து அணி.
அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணியை நவம்பர் 13 ஆம் தேதியன்று சந்திக்க உள்ளது. இந்த நிலையில், இங்கிலாந்து அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது நடந்த சம்பவம் தொடர்பான வீடியோ, தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.
மைதானம் முழுவதும் இந்தியா மற்றும் இங்கிலாந்து நாட்டு ரசிகர்கள் அதிகம் கூடி இருந்தனர். இந்திய அணியின் பேட்டிங்கின் போது ரசிகர்கள் சத்தம் அதிகமாக இருந்த நிலையில், இங்கிலாந்தின் அதிரடி பேட்டிங்கால் சற்று அமைதியாக இருந்தனர். அந்த சமயத்தில் ஃபீல்டிங் நின்ற ஹர்திக் பாண்டியா, பார்வையாளர்களை நோக்கி ஆரவாரம் செய்து ஆதரவு தரவும் சைகை காட்டினார். அதன்படி ரசிகர்கள் அனைவரும் ஆர்ப்பரிக்க தொடங்க, மீண்டும் பழைய மோடுக்கு மைதானம் வந்தது.
ஆனால், அப்படி நடந்த அடுத்த பந்திலேயே பவுண்டரியை விளாசினார் ஜோஸ் பட்லர். இதனை அறிந்ததும் ரசிகர்கள் ஆரவாரம் சற்று குறைய தொடங்கியது. இதே ஃபார்மில் கடைசி வரை ஆடி இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
Pandya hypes the crowd and on next ball Buttler hits four. XD pic.twitter.com/IzImanF31R
— Hamid :) (@hamidch_786) November 10, 2022
Also Read | தம் வீட்டு பணியாளர் மீது காதலில் விழுந்த செல்வந்த பெண்.. உருக வைத்த காரணம்..!