'என் கிரிக்கெட் கேரியர்லயே அந்த ஒரு விசயத்துல மட்டும்...' 'மனசு உடைஞ்சு போயிட்டேன்...' - மனம் திறந்த கங்குலி...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி. தன்னுடைய பிசிசிஐ தலைவர் பொறுப்பை திறம்பட செய்து வருவதாக புகழாரம் சுட்டியுள்ளனர்.
பல ஆண்டுகளாக தன்னுடைய ஆட்ட திறமையால் இந்திய அணியின் வெற்றி பாதைக்கு வித்திடவரும், கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றாலும் பிசிசிஐ தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் சவுரவ் கங்குலி.
அவரின் கடந்து வந்த பாதை குறித்தும், அதில் ஏற்பட்ட தடைகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.
'கடந்த 2000ல் இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றபோது நாட்வெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற்றது. அதன்பின் 2003ல் உலக கோப்பை தொடரின் இறுதிப்போட்டிக்கு இந்தியா முன்னேறவும் செய்தது.
ஆனால் 2005ல் நடைபெற்ற சம்பவம் என்னுடைய கிரிக்கெட் கேரியரில் மிகவும் மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால், என் கேரியரில் மிகப்பெரிய பின்னடைவை சந்திக்கவும் நேர்ந்தது.
அப்போது இந்திய அணியின் பயிற்சியாளர் க்ரேக் சாப்பலுடன் எனக்கு ஆரம்பம் முதலே இருந்த கருத்து வேறுபாடுகள் இருந்தது. அதுவே என்னுடைய கேப்டன் பதவி பறிப்பிற்கு சூனியமாக அமைந்தது.
நாம் வாழும் இந்த வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும். பல நெருக்கடி சூழல்களை சந்திக்க நாம் தயாராக இருக்கும் மனநிலையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்' என பல நாள் தன் மனதில் இருந்த பாரத்தை இறக்கிவைத்தது போல கூறினார்
இந்திய முன்னாள் கேப்டன் கங்குலி, வீரேந்திர சேவாக், யுவராஜ் சிங், ஹர்பஜன் சிங் மற்றும் எம்எஸ் தோனி ஆகியோரின் கேரியரில் முக்கிய பங்காற்றியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.