"'அசுர' பலத்துல இருக்குற 'மும்பை' டீம அசைக்கணும்'னா.. அந்த ஒரு டீமால மட்டும் தான் முடியும்.." அடித்துச் சொல்லும் 'முன்னாள்' வீரர்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடர் நாளை மறுநாள் ஆரம்பமாகவுள்ள நிலையில், இதன் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் மோதுகின்றன.
இதுவரை நடந்து முடிந்துள்ள 13 ஐபிஎல் தொடர்களில், மும்பை இந்தியன்ஸ் அணி அதிகமாக, 5 முறை கோப்பையை வென்று, பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது. அது மட்டுமில்லாமல், கடந்த 2 சீசன்களில், தொடர்ந்து இரு முறை மும்பை இந்தியன்ஸ் அணி தான் கோப்பையை வென்றுள்ளது. இதனால், தொடர்ச்சியாக மூன்றாவது முறை கோப்பையை கைப்பற்றும் நோக்கில், அந்த அணி அதிக பலத்துடன் விளங்குகிறது.
அனுபவ வீரர்கள், இளம் வீரர்கள் என அனைத்தும் கலந்த கலவையாக மும்பை அணி திகழும் நிலையில், இப்படி அசுரபலம் வாய்ந்த மும்பை அணியின் தொடர் வெற்றியைத் தடுக்க, ஒரு அணியால் மட்டும் தான் முடியும் என இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா (Aakash Chopra) கருத்து தெரிவித்துள்ளார்.
'மும்பை இந்தியன்ஸ் அணிக்கு போட்டி கொடுக்கக் கூடிய ஒரு அணியால் முடியும் என்றால், அது நிச்சயம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் மட்டுமே முடியும். டெல்லி அணி மிகவும் பலம் பொருந்திய ஒன்று. அந்த அணியின் அனைத்து துறைகளிலும் வீரர்கள் மிக பொருத்தமாக உள்ளனர்.
டெல்லி அணிக்கு முதல் பலமே அந்த அணியில், சிறந்த இந்திய வீரர்கள் இருப்பது தான். அங்கு ஷிகர் தவான், ரிஷப் பண்ட், பிரித்வி ஷா, ரஹானே, அஸ்வின், அக்சர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ் மற்றும் அமித் மிஸ்ரா ஆகிய வீரர்கள் உள்ளனர்.
இந்த அற்புதமான இந்திய வீரர்கள் படை, டெல்லி அணிக்கு தொடர்ந்து வெற்றியைத் தேடித் தரும் படையாகும். இதற்கு அடுத்தபடியான பலம் என்னவென்றால், பந்து வீச்சுத் துறையில், ரபாடா, நோர்ஜே மற்றும் க்றிஸ் வோக்ஸ் உள்ளிட்ட வெளிநாட்டு வீரர்களும் உள்ளனர்.
அஸ்வின், அக்சர் படேல், உமேஷ் யாதவ் உள்ளிட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் இவர்களோடு இணைந்து சிறப்பாக பந்து வீசினால், நிச்சயம் டெல்லி அணியால் நிறைய போட்டிகளில் வெல்ல முடியும்' என ஆகாஷ் சோப்ரா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.