கிரிக்கெட்டை ஒரு கை பார்த்தாச்சு... அடுத்து சினிமா தான் டார்கெட்!.. முதல் பந்துலயே சிக்சர்!!.. ஒரு வேலை கமல் ரசிகரா இருப்பாரோ?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி தற்போது சினிமா பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, 'கேப்டன் 7' என்ற டைட்டிலில் புது அனிமேஷன் தொடர் ஒன்றை தயாரிக்கவுள்ளார்.
பல ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் தோனி இந்த 7 எண் பதித்த ஜெர்சியை அணிந்திருந்தார். உளவு தொடரான இந்த 'கேப்டன் 7' தற்போது ப்ரீ புரொடக்ஷன் (pre-production) பணிகளில் இருக்கிறது.
இந்தத் தொடரின் முதல் சீசன், இந்தியாவின் முன்னாள் கேப்டனை அடிப்படையாகக் கொண்டது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் பிளாக் ஒயிட் ஆரஞ்சு பிராண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் ஒரு கூட்டு முயற்சிதான் 'கேப்டன் 7' என்று தெரிவித்துள்ளார் சாக்ஷி.
இந்தியாவின் முதல் கற்பனை கதை கலந்த உளவு அனிமேஷன் தொடர் எனக் கருதப்படும், இந்த தொடர் அடுத்த ஆண்டு முதல் சீசனுடன் தொடங்கவிருக்கிறது. இதுகுறித்து சாக்ஷி தோனி கூறுகையில், 'கேப்டன் 7' சாகசங்கள் நிறைந்த ஒரு நிகழ்ச்சியாக இருக்கும். இந்த தொடர் உலகம் முழுவதும் உள்ள ஆன்லைன் ஓடிடி தளங்களில் வெளியாகும் என்றார்.