VIDEO: இனி அவருக்கு 'இப்படி' ஒரு சான்ஸ் கிடைக்குமா...? டி காக்-ன் 'வேற லெவல்' தந்திரம்...! 'பின்னாடி திரும்பி பார்த்திட்டே ஸ்ட்ரைக்கர் என்ட் நோக்கி ஓடி வந்தவருக்கு...' - முன்னாடி காத்திருந்த அதிர்ச்சி...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 05, 2021 12:07 PM

பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையிலான 2-வது ஒருநாள் போட்டி நேற்று (05-04-2021) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது.

fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock

தென்னாப்பிரிக்க அணியில் குவன்டன் டி காக், அல்டன் மார்க்ரம் ஆகியோர் துவக்க வீரராக களமிறங்கினர். இந்த பார்டர்னர்ஷிப் 55 ரன்கள் குவித்தது. மார்க்ரம் 39 ரன்களும், டி காக் 80 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்கள். அடுத்து கேப்டன் டெம்பா பவுமா (92), வன் டிர் துஷன் (60), டேவிட் மில்லர் (50) ஆகியோர் அரை சதம் கடந்து ஸ்கோரை மளமளவென கூட்டினர்.

fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock

தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 341/6 என்று இமாலய ரன்னுடன் மேட்ச்சை முடித்தனர். பாகிஸ்தான் அணியின்  ஃபக்கர் ஜமானின் வேறலேவல் அதிரடியில் \ 324/9 வரை வந்து 17 ரன்களில் தோல்வி தழுவியது. இதன் மூலம் தொடர் 1-1 என்று சமன் ஆனது. ஃபக்கர் ஜமான் ஒற்றை ஆளாக போராடி அணியை வெற்றிப்பாதை நோக்கி அழைத்து வந்தார்.

fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock

கடைசியில் ஃபக்கர், 155 பந்துகளில் 18 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் உட்பட 193 ரன்கள் சேர்த்து சர்ச்சையான ரன் அவுட் ஆனதால், பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 324/9 ரன்கள் மட்டும் குவித்து 17 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது.

fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock

பாகிஸ்தான் ஜெய்க்க வேண்டும் என்றால் கடைசி ஓவருக்கு 31 ரன்கள் தேவை. முதல் பாலுக்கு ஃபக்கர் ஜமான், இரண்டு ரன்கள் ஓட திட்டமிட்டிருந்தார். முதல் ரன்னை சுலபமாக ஓடிய அவர், இரண்டாவது ரன்னையும் பதற்றமில்லாமல் ஓடினார். அப்போது விக்கெட் கீப்பர் டி காக் பந்தை எடுத்தவரிடம், பௌரிடம் பந்தை எறியுங்கள் எனக் கூறினார். தொடர்ந்து கூறிக்கொண்டிருந்ததால், இரண்டாவது ரன் ஓடிய ஃபக்கர் நான் ஸ்ட்ரைக்கர் என்டை பார்த்தவாறு ஓடினார். ஆனால், பந்தை எடுத்த மார்க்கரம், நான் ஸ்ட்ரைக்கர் என்டில் எறியாமல், நேரடியாக விக்கெட் கீப்பர் முனையில் எறிந்தார். பந்து போல்டில் பட்டது. கொஞ்சமும் பதற்றமில்லாமல் ரிலாக்ஸாக ஓடிவந்த ஃபக்கர் ரன்-அவுட் ஆனார்.

fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock

இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பேட்ஸ்மேனை திசைதிருப்பும் வகையில் பீல்டரோ, விக்கெட் கீப்பரோ நடந்து கொள்ளக் கூடாது என்பது ஐசிசியின் விதி.

ஐசிசி விதிமுறைகள்:

அ) விதி எண் 41.5: பேட்ஸ்மேனின் மனிலையை திசைதிருப்புதல் குற்றம்.

ஆ) விதி எண் 41.5.1:  பேட்டிங் பண்றவர் ரன் ஓடும்போது, பீல்டர்கள் பேச்சு அல்லது சைகை மூலம் பேட்ஸ்மேனை திசை திருப்புதல் குடம்.

இ) விதி எண் 41.5.2: திசை திருப்புதல் நடந்ததா, இல்லையா? என்பது அம்பையர் மட்டுமே பார்த்து தீர்ப்பு சொல்ல வேண்டும்.

ஈ) விதி எண் 41.5.4: திசை திருப்புதல் நடந்திருப்பதை நடுவர் உறுதிப்படுத்தும் பட்சத்தில் அந்த பந்தை, டெத் பால் என அறிவிக்க வேண்டும். களத்தில் இருக்கும் இரண்டு நடுவர்களும் ஒருமித்த கருத்துடன் இருந்தால் மட்டுமே இப்படி அறிவிக்க வேண்டும்.

இப்போது கிரிக்கெட்டில் இம்மாதிரியான விதிகள் இருப்பதால் பலர் விமர்சனங்களை எழுப்பி வருகிறார்கள். களத்தில் திசை திருப்புதல் நடந்துள்ளது. நடுவர்கள் சரியான முடிவு எடுக்காமல் இருந்தது ஏற்புடையது அல்ல என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

விதிகளில் இருந்தாலும் இதை பெரும்பாலும் கடைபிடிப்பதில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தென் ஆப்பிரிக்கா போன்ற வலுவான அணியுடன் 200 அடிப்பது மிகப்பெரிய சாதனையாக கருதப்படும் சூழலில் டி காக் எடுத்த சர்ச்சைக்குரிய ரன் அவுட்டினால் அந்த சாதனை தவிடு பொடியாகி உள்ளது

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fakhar zaman Trick Run Out while doing Quinton de Kock | Sports News.