VIDEO: ‘ஒரே ஒரு ஷாட் தான்’.. ‘தம்பி அந்த பேட்டை கொஞ்சம் காட்டுங்க’.. மிரண்டுபோன பென் ஸ்டோக்ஸ்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியின்போது ஷர்துல் தாகூரின் பேட்டை, பென் ஸ்டோக்ஸ் வாங்கிப் பார்த்த வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது.

இந்தியா-இங்கிலாந்துக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி நேற்று புனே மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 329 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ரிஷப் பந்த் 78 ரன்களும், ஷிகர் தவான் 67 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா 64 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 330 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி, 50 ஓவர்கள் முடிவில் 322 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக இங்கிலாந்து அணியின் இளம்வீரர் சாம் கர்ரன் 95 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இந்திய அணியைப் பொறுத்தவரை வேகப்பந்து வீச்சாளர்களான ஷர்துல் தாகூர் 4 விக்கெட்டுகளும், புவனேஷ்வர் குமார் 3 விக்கெட்டுகளும், நடராஜன் 1 விக்கெட்டும் எடுத்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 2-1 என்ற கணக்கில் ஒருநாள் தொடரைக் கைப்பற்றி இந்தியா கோப்பையை வென்றது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூர், கடைசி நேரத்தில் 21 பந்துகளில் 30 ரன்கள் (3 சிக்சர்கள், 1 பவுண்டரி) எடுத்தார். அதிலும் குறிப்பாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வீசிய 45-வது ஓவரில், லாங் ஆஃப் திசையில் அற்புதமான சிக்சர் ஒன்றை ஷர்துல் தாகூர் விளாசினார்.
— Simran (@CowCorner9) March 28, 2021
அந்த அபாரமான சிக்சரைப் பார்த்து வியந்த பென் ஸ்டோக்ஸ், ஆச்சரியத்துடன் ஷர்துல் தாகூரின் பேட்டை கையில் வாங்கி சிரித்தபடி அந்த பேட்டை வாங்கிப் பார்த்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
