அப்போ அலி பாயிடம் வலிமை அப்டேட்.. இப்போ ஷமி பாயிடம் பீஸ்ட் அப்டேட்.. தெறிக்க விட்ட ரசிகர்கள்..

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 13, 2022 07:55 PM

இந்திய வீரர் முகமது ஷமியிடம் மைதானத்தில் இருந்த ரசிகர் ஒருவர் கேட்ட கேள்வி, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

Fans asking beast update to mohammed shami in 2nd test

நடிகர் அஜித் குமார் மற்றும் இயக்குனர் ஹெச். வினோத் ஆகியோர் கூட்டணியில் உருவான 'வலிமை' திரைப்படம், கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி, திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

வலிமை திரைப்படம்

முன்னதாக, இந்தப் படத்தின் ஷூட்டிங், கொரோனா தொற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா தொற்று காரணமாக நிறுத்தப்பட்டது. இதனிடையே, படத்தின் ஷூட்டிங் சில காரணங்களால் தாமதமாகி, சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மொத்தமாக முடிவடைந்து, சமீபத்தில் திரைப்படமும் வெளியானது.

மொயீன் அலியிடம் வலிமை அப்டேட்

இதற்கு மத்தியில், பல பிரபலங்களிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் டிரெண்ட் செய்து இருந்தனர். அதிலும் குறிப்பாக, சென்னை சேப்பாக்கத்தில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த இங்கிலாந்து வீரர் மொயீன் அலியிடம், அஜித் ரசிகர்கள், "அலி பாய், வலிமை அப்டேட்" என கேட்ட வீடியோ அதிகம் வைரலாகி இருந்தது. இது பற்றி, சிஎஸ்கே அணிக்காக ஆடிய மொயீன் அலி கருத்தும் தெரிவித்திருந்தார்.

'அரபிக்குத்து'

இந்நிலையில், தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் போது, நடிகர் விஜய்யின் திரைப்படம் குறித்த அப்டேட்டை, முகமது ஷமியிடம் ரசிகர்கள் கேட்டுள்ளனர். நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள திரைப்படம் 'பீஸ்ட்'. ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம், 14 ஆம் தேதி வெளியான, 'அரபிக் குத்து' என்ற முதல் சிங்கிள், இன்று வரை உலகளவில் சக்கை போடு போட்டு வருகிறது.

பீஸ்ட் அப்டேட்

இதன் பிறகு, கடந்த ஒரு மாதமாக, பீஸ்ட் திரைப்படம் குறித்து அப்டேட் ஒன்றும் வரவில்லை. இதனைத் தொடர்ந்து, இந்தியா மற்றும் இலங்கை அணிகள், டெஸ்ட் போட்டியில் மோதி வந்தன. அப்போது, இந்திய அணி ஃபீல்டிங் செய்து கொண்டிருந்த சமயத்தில், பவுண்டரி லைன் அருகே நின்ற வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமியிடம், "ஷமி பாய், பீஸ்ட் அப்டேட்" என ரசிகர்கள் கேட்டனர்.

வைரல் வீடியோ

இதற்கு ஷமி எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் நின்று கொண்டிருந்த நிலையில், இது தொடர்பான வீடியோக்கள், இணையத்தில் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. அப்போது மொயீன் அலியிடம் வலிமை அப்டேட்டினை ரசிகர்கள் கேட்டது போல, தற்போது ஷமியிடம் பீஸ்ட் அப்டேட் கேட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags : #MOHAMMED SHAMI #MOEEN ALI #VALIMAI UPDATE #BEAST UPDATE #முகமது ஷமி #பீஸ்ட் அப்டேட் #வலிமை அப்டேட்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Fans asking beast update to mohammed shami in 2nd test | Sports News.