
"அந்த 'மனுஷன்' சும்மா தீயா வேல செய்யுறாருங்க.. நல்லா 'ENJOY' பண்ணியும் ஆடுறாரு.." சக 'சிஎஸ்கே' வீரரை பாராட்டித் தள்ளிய 'சாம் குர்ரான்'!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 14 ஆவது ஐபிஎல் சீசனை தோல்வியுடன் தொடங்கினாலும், அதன் பிறகு இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று, பலம் வாய்ந்த அணியாக திகழ்கிறது.

இதில், நேற்றிரவு ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியை, முழுக்க கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிஎஸ்கே, பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அற்புதமாக செயல்பட்டது. கடந்த சீசனில், பிளே ஆஃப் சுற்றுக்குக் கூட முன்னேறாமல் வெளியேறிய சென்னை அணி, இந்த சீசனின் ஆரம்பத்திலேயே சிறப்பாக ஆடி வருவதால், அந்த அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், போட்டிக்குப் பிறகு பிராவோ மற்றும் சாம் குர்ரான் (Sam Curran) ஆகியோர் போட்டி குறித்து உரையாடினர். அப்போது பேசிய சாம் குர்ரான், 'முதல் போட்டியில் சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாலும், அதன் பிறகு நடைபெற்ற இரண்டு போட்டிகளில், பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் அசத்தினோம். முதல் போட்டிக்கு பிறகு, கிட்டத்தட்ட ஒரு வார இடைவெளி இருந்ததை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு தயாரானோம்.
எங்களது அணியில், ஜடேஜா, பவுலிங் மற்றும் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டார். அதே போல, மொயின் அலி தீயாக ஆடுகிறார். அவர் டாப் ஆர்டரில் பேட்டிங் செய்வதை அதிகம் மகிழ்ந்து ஆடுகிறார் என நான் நினைக்கிறேன்' என சாம் குர்ரான், பிராவோவிடம் கூறினார்.
Two wins in a row 👏@imjadeja's fielding brilliance 🔥
Moeen Ali's all-round performance 💪@ChennaiIPL duo @DJBravo47 & @CurranSM discuss it all post team's super win at the Wankhede. 👌 👌 - By @NishadPaiVaidya #VIVOIPL #CSKvRR
Full interview 🎥 👇https://t.co/TVVpoevwys pic.twitter.com/EqI9uZZg9k
— IndianPremierLeague (@IPL) April 20, 2021
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில், மொயின் அலி 26 ரன்கள் எடுத்தது மட்டுமில்லாமல், பந்து வீச்சில், 7 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
