தென்னாப்பிரிக்கா : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், விராட் கோலி செய்த விஷயம் தொடர்பான வீடியோ, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தற்போது டெஸ்ட் போட்டித் தொடரில் ஆடி வருகிறது.
இதன் முதல் போட்டி, செஞ்சுரியன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது. இதன்படி ஆடிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸில் 327 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கே எல் ராகுல் 123 ரன்கள் எடுத்தார். தென்னாப்பிரிக்க அணி தரப்பில் நிகிடி 6 விக்கெட்டுகளை எடுத்திருந்தார்.
யார்.. யாருக்கு நகைக்கடன் தள்ளுபடி கிடையாது? தமிழக அரசு புதிய உத்தரவு.. முழு விவரம்
தடுமாற்றம்
தொடர்ந்து பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்க அணி, ஆரம்பத்தில் இருந்தே தடுமாற்றம் கண்டது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த நிலையில், 197 ரன்களில் ஆல் ஆவுட்டானது. இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். தொடர்ந்து, மூன்றாம் நாளான நேற்று, இந்திய அணி பேட்டிங்கையும் தொடங்கியது.
கோலி நடனம்
இதனிடையே, தென்னாபிரிக்க அணியின் பேட்டிங்கின் போது, கோலி செய்த நடனம் தொடர்பான வீடியோ ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. ஆட்டத்தின் போது, ஓவர் ஒன்று முடிந்த சமயத்தில், மைதானத்தில் நடந்து செல்லும் விராட் கோலி, கையைத் துப்பாக்கி போல வைத்துக் கொண்டே, அழகாக நடனமாடிய படி, மெல்ல நடந்து செல்கிறார். இது தொடர்பான வீடியோ, சமூக வலைத்தளத்தில் பகிரப்பட்ட உடனேயே, அதிகம் வைரலாக ஆரம்பித்தது.
சந்தேகம் தான்.. 'சன் ரைசர்ஸ்' அணியை சீண்டிய டேவிட் வார்னர்.. வைரல் ட்வீட்
ஜாலி கோலி
மைதானத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக காணப்படும் விராட் கோலி, அவ்வப்போது இது போன்ற ஜாலியான செயல்களிலும் ஈடுபடுவார். நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியிலும் கோலி இது போன்று,மிகவும் ஜாலியாக நடனமாடி இருந்தார். அதே போல, சமீபத்தில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலும், ஸ்பைடர் கேமராவை வைத்து, விளையாட்டில் ஈடுபட்டிருந்தார். அப்படியான வீடியோக்களும் அதிகம் வைரலாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மற்ற செய்திகள்
