"ஈசாலா கப் நஹி".. டுபிளேஸிஸ் சொன்னதை கேட்டு திகைச்சுப்போன ரசிகர்கள்.. விராட் கோலி ரியாக்ஷன் தான்😂.. வீடியோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுபெங்களூரு அணி வீரரான டுபிளேஸி செய்தியாளர்கள் சந்திப்பில் செஞ்ச சம்பவம் தான் கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது வைரலாக பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பான வீடியோவும் அதிக அளவில் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஐபிஎல் தொடர். கடந்த வருடத்திலிருந்து பத்து அணிகள் இந்த தொடரில் பங்கேற்று வருகின்றன. அதன்படி சில தினங்களுக்கு முன்னர் இந்த ஆண்டுக்கான ஐபிஎல் அட்டவணை வெளியிடப்பட்டது. மார்ச் 31ஆம் தேதி துவங்கிய ஐபிஎல் போட்டிகள் டிசம்பர் 28 ஆம் தேதி வரை இந்தியாவில் நடைபெற இருக்கின்றன. இந்தத் தொடரின் முதல் போட்டியில் சென்னை அணியை எதிர்த்து குஜராத் அணி விளையாடியது. இதில் குஜராத் வெற்றி பெற்றது.
Images are subject to © copyright to their respective owners.
நேற்று நடந்த மற்றொரு போட்டியில் மும்பையை எதிர்த்து விளையாடியது பெங்களூரு அணி. சின்னசாமி மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, மும்பை முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்களை எடுத்தது. மும்பை அணியின் திலக் வர்மா சிறப்பாக ஆடி, 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து பெங்களூரு அணி சேஸிங்கில் இறங்கியது. அந்த அணியின் துவக்க ஆட்டக்காரர்களான விராட் கோலி மற்றும் டுபிளேஸி இணை அபாரமாக ஆடி வெற்றிக்கு வித்திட்டது. இதன் பலனாக 16.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து அந்த அணி வெற்றியை ருசித்தது.
Images are subject to © copyright to their respective owners.
முன்னதாக அணி சார்பில் கோலி, டுபிளேஸி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பெங்களூரு அணியின் வாசகமான 'ஈசாலா கம் நம்தே' என்பதற்கு பதிலாக, டுபிளேஸி 'ஈசாலா கப் நஹி' என கூற அங்கிருந்த அனைவரும் சிரிக்கின்றனர். அப்போது அவருக்கு அருகில் அமர்ந்திருந்த கோலி இதை கேட்டு சிரித்ததுடன், டுபிளேஸியிடம் இதனை விவரிக்கவும் செய்கிறார். இந்த வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது.
Faf Du Plessis by mistake says "Ee Sala Cup Nahi". pic.twitter.com/mhyR7Dd1hI
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 1, 2023