"இறைவனுக்கு நன்றி".. இசைஞானி இளையராஜாவை சந்தித்த நடிகர் சூரி.. நெகிழ்ச்சி போஸ்ட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விடுதலை முதல் பாகம் வெளியாகி இருக்கும் நிலையில் படத்தின் கதாநாயகன் சூரி இசைஞானியை சந்தித்திருக்கிறார். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
ஆர்எஸ் இன்ஃபோடெயின்மென்ட் தயாரிப்பாளர் எல்ட்ரெட் குமாரின் தயாரிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் ‘விடுதலை’ திரைப்படம் இரண்டு வெவ்வேறு பாகங்களாக உருவாகி வருகிறது. விடுதலை படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், ராஜீவ் மேனன், சேத்தன் மற்றும் பல முக்கிய நடிகர்கள் நடித்திருக்கின்றனர். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் விடுதலை படத்திற்கு மேஸ்ட்ரோ இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார்.
Images are subject to © copyright to their respective owners.
தங்கம் எழுதிய வேங்கைச்சாமி திரைக்கதையை மூலக்கதையாகக் கொண்டும், ஜெயமோகன் எழுதிய துணைவன் சிறுகதையை அடிப்படையாக் கொண்டும் இயக்குநர் வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி உள்ளார். இவர்களுள் தங்கம் என்பவருடன் ஏற்கனவே வெற்றிமாறன் இணைந்து எழுதிய 'இறைவன் மிகப்பெரியவன்' கதையை, தற்போது இயக்குனர் அமீர் படமாக இயக்கி வருகிறார்.
முன்னதாக விடுதலை பட முதல் பாகத்தின் டிரெய்லர் & இசை வெளியீட்டு விழா நடந்தது. அதில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். படத்தின் டிரெய்லரும் அப்போது வெளியிடப்பட்டது. தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை ரிலீஸ் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த படம் கடந்த மார்ச் 31 ஆம் தேதி ரிலீசாகியது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் இந்த படம் பெற்று வருகிறது.
Images are subject to © copyright to their respective owners.
இந்நிலையில் நடிகர் சூரி, இசைஞானி இளையராஜாவை சந்தித்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் எழுதியுள்ள பதிவில்,"சற்று நேரமுன்பு. "இசை"யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்.. இறைவனுக்கு நன்றி! " எனக் குறிப்பிட்டுள்ளார். அதனுடன், இளையராஜாவுக்கு பூங்கொத்து அளிக்கும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டுள்ளார்.
சற்று நேரமுன்பு..
"இசை"யை சந்தித்து நன்றி கூறினேன்..ஆசி வாங்கினேன்..
இறைவனுக்கு நன்றி! @ilaiyaraaja @rsinfotainment #viduthalai pic.twitter.com/6aVZMQnU64
— Actor Soori (@sooriofficial) April 3, 2023