எப்படியாவது COMMITTED ஆகுங்க.. காதலில் விழ சொல்லி கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கும் நாடு.?

முகப்பு > செய்திகள் > உலகம்

By Madhavan P | Apr 03, 2023 01:58 PM

சீனாவில் சில கல்லூரிகள் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான காரணம் தான் பலரையும் ஆச்சர்யப்படுத்தி இருக்கிறது.

Chinese colleges extend spring break for students reportedly

Images are subject to © copyright to their respective owners.

சீனா என்றவுடன் நம்முடைய ஞாபகத்திற்கு வருவது அங்குள்ள மக்கள் தொகை தான். மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த கடந்த 1980 ஆம் ஆண்டு ஒரு குழந்தை திட்டத்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியது. கடந்த 2015 ஆம் ஆண்டு வரை இந்த திட்டம் அங்கே நடைமுறையில் இருந்தது. பொருளாதார சூழ்நிலை, கல்வி செலவுகள் இத்தகைய காரணங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருந்ததாக சொல்லப்பட்டது. இந்த சூழ்நிலையில் கடந்த வருடம் சீனாவின் குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சி அடைந்தது. கடந்த 60 வருடங்களில் முதன்முறையாக குழந்தை பிறப்பு விகிதம் வீழ்ச்சியை சந்தித்ததால் அதனை ஈடுகட்ட அரசு பல்வேறு திட்டங்களில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.

Images are subject to © copyright to their respective owners.

கடந்த வருடம் சீனா வெளியிட்ட தகவலின் படி ஆயிரம் பேருக்கு 6.77 குழந்தைகள் பிறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் குழந்தை பிறப்பு விகிதத்தை அதிகரிக்க சீனாவின் சில மாகாணங்கள் புதிய முயற்சியை எடுத்து வருகின்றன. அதன் பலனாக புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாட்கள் விடுப்பு அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சீனாவில் சில கல்லூரிகள் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறையை அளித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சிச்சுவான் தென்மேற்கு தொழிற்கல்வி சிவில் ஏவியேஷன் கல்லூரி மற்றும் ஜியாமென் பல்கலைக்கழகம் ஆகிய இரண்டும் தங்களது மாணவர்களுக்கு விடுமுறையை நீட்டித்திருக்கின்றன. இதன்மூலம், மாணவர்கள் தங்களுக்கான இணையை தேர்ந்தெடுக்க நேரம் கிடைக்கும் எனவும் நிர்வாகிகள் தெரிவித்திருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Images are subject to © copyright to their respective owners.

முன்னதாக, சீனாவின் சில மாகாணங்களில் புதுமண தம்பதிகளுக்கு சம்பளத்துடன் கூடிய 30 நாட்கள் விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இது குழந்தை பிறப்பு விகிதத்தை நிச்சயமாக அதிகரிக்கும் என்கிறார்கள் அதிகாரிகள். வடமேற்கு மாகாணமான கான்சூ, நிலக்கரி உற்பத்திக்கு பேர்போன ஷாங்ஷி ஆகிய மாகாணங்களில் தொழிலாளர்களுக்கு 30 நாட்கள் திருமண விடுப்பு அளிக்கப்படுகிறது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் இந்த திட்டம் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

Tags : #CHINA #LOVE

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Chinese colleges extend spring break for students reportedly | World News.