"என்னங்கய்யா, 'மேட்ச்' நடுவுல இப்டி எல்லாமா 'FUN' பண்ணுவீங்க??.." தினேஷ் கார்த்திக் - தவான் இணைந்து பாத்த 'வேலை'.." 'வைரல்' வீடியோ!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 20 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக, 4 சிக்ஸர்களுடன் 45 ரன்கள் எடுத்து அசத்தியிருந்தார் ரசல். தொடர்ந்து, இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி, ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தது.
அதிலும் குறிப்பாக, முதல் ஓவரிலேயே 6 பவுண்டரிகள் அடித்து சாதனை படைத்தார் பிரித்வி ஷா. மறுபக்கம் நின்ற ஷிகர் தவானும், பிரித்வி ஷாவுடன் இணைந்து சிறப்பாக ரன் குவித்தார். இறுதியில், டெல்லி அணி 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து, 17 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை எட்டிப் பிடித்தது. பிரித்வி ஷா (Prithvi Shaw), 41 பந்துகளில், 11 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 82 ரன்கள் குவித்து ஆட்ட நாயகன் விருது வென்றிருந்தார்.
இதனிடையே, இந்த போட்டியில் கொல்கத்தா அணி வீரர் தினேஷ் கார்த்திக் (Dinesh Karthik) மற்றும் டெல்லி அணி வீரர் ஷிகர் தவான் (Shikhar Dhawan) காமெடியாக செய்த செயல் ஒன்று, தற்போது அதிகம் வைரலாகி வருகிறது. டெல்லி அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, 12 ஆவது ஓவரை வருண் சக்கரவர்த்தி வீசினார். அப்போது, அந்த ஓவரின் மூன்றாவது பந்தை ஷிகர் தவான் எதிர்கொண்டார். இந்த பந்து, லெக் ஸ்டம்ப் பக்கம், வைடாக சென்றது.
இந்த பந்தை பிடித்த கீப்பர் தினேஷ் கார்த்திக், ஸ்டம்பிங் செய்து விட்டு அப்பீல் செய்தார். ஆனால், ஷிகர் தவானின் கால் கிரீஸுக்குள் தான் இருந்தது. இதனால், விக்கெட்டிற்கான அப்பீலை நடுவரிடம் கேட்காமல், தவானிடமே தினேஷ் கார்த்திக் கிண்டலாக கேட்டார். இதற்கு மேலும் கிண்டலாக பதிலளிக்கும் வகையில், ஷிகர் தவான், கிரீஸிற்குள் முழங்காலிட்டு தினேஷ் கார்த்திக்கை பார்த்து வேண்டுவது போல நின்றார்.
— Cricket Unlimi (@CricketUnlimi) April 29, 2021
பரபரப்பான போட்டிக்கு மத்தியிலும், இந்திய வீரர்கள் இப்படி நடந்து கொண்டது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
