‘வைரலாகும் வார்னர் அணிந்திருந்த ஷூ’!.. அப்படி என்ன எழுதியிருந்தது..? இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் மனைவி உருக்கம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியின் போது ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐபில் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் அடித்தனர்.
இதனை அடுத்து பேட்டிங் செய்த சென்னை அணி, 18.3 ஓவர்களில் 173 ரன்கள் அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்களும், டூ பிளஸ் 53 ரன்களும் எடுத்தனர். ஹைதராபாத் அணியைப் பொறுத்தவரை ரஷித் கான் 3 விக்கெட்டுகள் எடுத்தார். இப்போட்டியில் பெற்ற வெற்றியின் மூலம் சென்னை அணி மீண்டும் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த நிலையில் இப்போட்டியில் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அணிந்திருந்த ஷூவில், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பெயர் பதிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டிருந்த வார்னரின் மனைவி கேண்டீஸ் வார்னர், ‘இந்த உலகில் எங்கிருந்தாலும், நாங்கள் எப்போது உங்களுடனே இருப்போம்’ என பதிவிட்டுள்ளார். இது தற்போது சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று வருகிறது.

மற்ற செய்திகள்
