VIDEO: ‘இதெல்லாம் ரொம்ப ரொம்ப RARE தான்’.. நேத்து கொஞ்சம் பதற்றமாக காணப்பட்ட ‘தல’!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
ஐபிஎல் தொடரின் 23-வது லீக் போட்டி நேற்று டெல்லி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஹைதராபாத் அணி, 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 171 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக மனிஷ் பாண்டே 61 ரன்களும், டேவிட் வார்னர் 57 ரன்களும் எடுத்தனர்.
இதனை அடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி விளையாடியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் களமிறங்கினர். இவர்கள் இருவரது கூட்டணியை ஹைதராபாத் அணியால் வெகு நேரமாக பிரிக்கவே முடியவில்லை. அதில் ருதுராஜ் கெய்க்வாட் 75 ரன்கள் எடுத்திருந்தபோது ரஷிக் கான் ஓவரில் போல்டாகினார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மொயின் அலியும் (15 ரன்கள்) ரஷித் கான் வீசிய 15-வது ஓவரில் அவுட்டாகினார். இதற்கு அடுத்த பந்திலேயே டு பிளசிஸும் (56 ரன்கள்) எல்பிடபுள்யூ ஆகி வெளியேறினார்.
இதனை அடுத்து ஜோடி சேர்ந்த ஜடேஜா-சுரேஷ் ரெய்னா கூட்டணி அதிரடியாக விளையாடியது. இதனால் 18.3 ஓவர்களில் 173 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன்மூலம் புள்ளிப்பட்டியலில் சிஎஸ்கே முதல் இடத்தை பிடித்துள்ளது.
இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் விக்கெட் கீப்பரான தோனி ஒரு கேட்ச்சை தவறவிட்டார். ஆட்டத்தின் முதல் ஓவரை தீபக் சாகர் வீசினார். முதல் பந்தை சிங்கிள் தட்டிய வார்னர், அடுத்த பந்தை ஜானி பேர்ஸ்டோக்கு ஸ்ட்ரைக் கொடுத்தார். அப்போது பேர்ஸ்டோ அடித்த பந்து இன்சைடு எஜ்ஜாகி பின்னால் சென்றது.
Dhoni Dropped the Catch!
Oh ho! Bahot hi rare moment of MY LIFE😳#IPL2021 #Dhoni pic.twitter.com/Od6wuNUkNt
— Kaafi Jenius (CSK/DHONI💛) (@JeniusKaafi) April 28, 2021
There is a difference between keeper dropped a catch and Dhoni dropped a catch.
— Godman Chikna (@Madan_Chikna) April 28, 2021
Catch drops in last 2 seasons
Koli : 13
Dhoni : 2
— Nagarjuna (@DhoniAArjun) April 28, 2021
Never seen Ms dhoni dropping catch #IPL2021 #CSKvSRH pic.twitter.com/EQET3EmyZi
— Sujal Bhandari (@SujalBhandari01) April 28, 2021
உடனே டைவ் அடித்த தோனி, பந்தை பிடிக்க முயன்று தவறவிட்டார். தூரமாக செல்லும் பந்தை கூட சுலமாக பிடிக்கும் தோனி, இந்த கேட்ச்சை தவறவிட்டது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது. உடனே ஸ்லிப்பில் சுரேஷ் ரெய்னா நிற்க வைக்கப்பட்டார். கேட்சை தவறவிட்டதால் சிறிது நேரம் தோனி பதற்றமாக காணப்பட்டார். இதனை அடுத்து சாம் கர்ரன் வீசிய ஓவரில் தீபக் சாகரிடம் கேட்ச் கொடுத்து ஜானி பேர்ஸ்டோ அவுட்டானார். இந்த நிலையில் தோனி இதுபோல் கேட்ச்சை தவறவிடுவது அரிதாக நடக்கும் செயல் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.