காதலித்து திருமணம் செய்துகொண்ட பிரபல கிரிக்கெட் வீராங்கனைகள்.. வாழ்த்து சொல்லும் கிரிக்கெட் உலகம்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇங்கிலாந்தை சேர்ந்த இரு கிரிக்கெட் வீராங்கனைகள் திருமணம் செய்துள்ளனர். இதனை அடுத்து கிரிக்கெட் பிரபலங்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Also Read | UPSC 2021: இந்தியாவுலயே முதலிடம் பிடித்த மாணவி.. யார் இந்த ஸ்ருதி ஷர்மா?
காதல் டூ கல்யாணம்
இங்கிலாந்தின் பிரபல கிரிக்கெட் வீராங்கனைகளான கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் ஆகியோர் நேற்று திருமணம் செய்துகொண்டதாக அறிவித்துள்ளனர். கடந்த 5 வருடங்களாக காதலித்துவந்த இருவருக்கும் 2019 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா காரணமாக திருமணத்தை தள்ளிவைப்பதாக இருவரும் அறிவித்தனர்.
2017 ஆம் ஆண்டு மகளிர் உலகக்கோப்பை தொடரை இங்கிலாந்து அணி வென்றது. அந்த அணியில் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். அதேபோல, 2022 ஆம் ஆண்டுக்கான ஒருநாள் உலகக்கோப்பை அணியிலும் இருவரும் இடம்பெற்றிருந்தனர். இந்த தொடரில் இறுதிப்போட்டி வரையில் இங்கிலாந்து அணி முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
முதன்முறை அல்ல
கிரிக்கெட் உலகில், இரு வீராங்கனைகள் திருமணம் செய்துகொள்வது இது முதல்முறை அல்ல. இதற்கு முன்னர், தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டேன் வான் நீகெர்க் - மரிசான் கேப் மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த லியா தஹுஹு-ஆமி சாட்டர்த்வைட் ஆகியோர் காதலித்து திருமணம் செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஒருபால் திருமணம் செய்துகொண்ட கிரிக்கெட் வீராங்கனைகளில் கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் மூன்றாவது தம்பதி ஆகும்.
வாழ்த்து மழை
இங்கிலாந்தில் நடைபெற்ற கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் திருமணத்தில் அந்நாட்டு கிரிக்கெட் வீராங்கனைகளான கேப்டன் ஹீதர் நைட், டேனியல் வியாட், இசா குஹா மற்றும் ஜென்னி கன் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில்," வார இறுதியில் திருமணம் செய்துகொண்ட கேத்ரின் ப்ரண்ட் மற்றும் நடாலி ஸ்கிவர் ஆகியோருக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மணமக்களுக்கு சமூக வலை தளங்கள் வாயிலாக தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.