கல்யாண வீட்டுல கேட்ட பயங்கர சத்தம்.. மணப்பெண்ணின் நண்பர் செஞ்ச விபரீதத்தால் சோகத்தில் முடிந்த திருமணம்..!
முகப்பு > செய்திகள் > இந்தியாஆந்திர மாநிலத்தில் திருமணத்தன்று மணப்பெண்ணை அவரது நண்பர் கொன்று, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read | "நரகத்துக்கு தான் போகணும்னாலும் எனக்கு ஓகே".. பரபரப்பை கிளப்பிய எலான் மஸ்க்.. பத்திகிட்ட டிவிட்டர்..!
சாஃப்ட்வெர் எஞ்சினியர்
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ளது ததிபார்த்தி என்னும் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் ரெட்டி. இவர் பெங்களூருவில் சாஃப்ட்வெர் எஞ்சினியராக பணிபுரிந்துவந்திருக்கிறார். இதனிடையே அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு இளம்பெண்ணும் பெங்களூரில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்துவந்திருக்கிறார். கொரோனா காரணமாக இருவரும் வீட்டில் இருந்தே பணிபுரிந்துவந்த வேளையில், அந்தப் பெண்ணிடம் நட்பாக பேசியிருக்கிறார் சுரேஷ்.
இதனிடையே ஒருநாள் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சுரேஷ், அந்தப் பெண்ணிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து, இந்த விஷயத்தை தனது பெற்றோரிடமும் அந்தப் பெண் கூறியுள்ளார். ஆனால், சுரேஷுக்கும் அந்தப் பெண்ணிற்கும் 13 வருட வயது வித்தியாசம் இருந்ததால் பெற்றோர் மறுத்துவிட்டனர்.
திருமணம்
இருப்பினும், இளம்பெண்ணிடம் தொடர்ந்து தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி சுரேஷ் வற்புறுத்திவந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த பெண்ணின் பெற்றோர் வேறு ஒரு இளைஞருக்கு தனது பெண்ணை திருமணம் செய்துவைக்க முடிவெடுத்துள்ளனர். திருமண வேலைகளும் துரிதமாக நடைபெற்று வந்திருக்கிறது.
அதன்படி, நேற்று அந்தப் பெண்ணுக்கு திருமணம் அதே கிராமத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதனிடையே, திடீரென மணமகளின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த சுரேஷ், துப்பாக்கியால் காதலித்துவந்த பெண்ணை சுட்டுவிட்டு, தன்னைத்தானே சுட்டிருக்கிறார். இதனால் பதறிப்போன திருமண வீட்டார், இருவரையும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டுசென்றனர். ஆனால், மருத்துவனைக்கு செல்லும் வழியிலேயே இருவரும் உயிரிழந்துவிட்டதாக தெரிகிறது.
விசாரணை
இதனிடையே காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திவருகின்றனர். கிராமத்தைச் சேர்ந்தவரான சுரேஷ் ரெட்டி பயன்படுத்திய துப்பாக்கி, அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது என்றும், அது எப்படி சுரேஷுக்கு கிடைத்தது என்பது குறித்தும் விசாரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருமணத்தன்று நண்பர் ஒருவர் மணமகளை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்தப் பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தீர்வல்ல
எந்த ஒரு பிரச்சினைக்கும் உயிரை மாய்த்துக் கொள்வது தீர்வாகாது. மன ரீதியான அழுத்தம் ஏற்பட்டாலோ, எதிர்மறை எண்ணம் எழுந்தாலோ, அதில் இருந்து மீண்டு வர கீழ்க்கண்ட எண்களுக்கு தொடர்பு கொண்டு ஆலோசனை பெறவும்.
மாநில உதவிமையம் : 104 .
சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044 -24640050
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
