ஆசிரியையை 2-வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.. யார் இவர்..? வெளியான தகவல்..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமுன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அருண் லால், ஆசிரியை ஒருவரை திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Also Read | ஹோட்டல் ஓனரிடம் கேட்காமல் ‘சமோசா’ எடுத்து சாப்பிட்ட நபர்.. வாக்குவாதத்தின் முடிவில் நடந்த அதிர்ச்சி..!
இந்திய கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் (வயது 66), கடந்த 1982-ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். 1989 ஆண்டு வரை இந்திய அணிக்காக 16 டெஸ்ட், 13 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். மேலும் உள்ளூர் கிரிக்கெட்டில் 10000-க்கும் மேற்பட்ட ரன்களை அடித்துள்ளார்.
கடந்த 1989-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற அவர், தொலைக்காட்சியில் கிரிக்கெட் வர்ணனையாளராக செயல்பட்டு வந்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட்டில் தனது சொந்த மாநிலமான கொல்கத்தாவின் பெங்கால் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். இவர் தலைமையில் நிறைய முன்னேற்றங்களை அடைந்துள்ள பெங்கால் அணி, இந்த வருட ரஞ்சி கோப்பையில் மிகச்சிறப்பாக செயல்பட்டு நாக்அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று அசத்தியது.
இந்த நிலையில் அருண் லால், தனது நீண்ட நாள் தோழியான புல்புல் சாஹாவை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 38 வயதான புல்புல் சாஹா ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். அருண் லால் ஏற்கனவே திருமணமாகி, கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்றுள்ளனர்.
வரும் மே 2-ஆம் தேதி மாலை 7 மணிக்கு கொல்கத்தாவில் இவர்களின் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்திற்கு நெருங்கிய கிரிக்கெட் வீரர்களுக்கும், பெங்கால் கிரிக்கெட் வாரியத்தின் முக்கிய நிர்வாகிகளுக்கும் அருண் லால் அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
