"காத்துவாக்குல 3 காதல்.." 15 வருஷம் லிவிங் டு கெதர்.. 6 குழந்தைங்க முன்னாடி நடந்த திருமணம்..
முகப்பு > செய்திகள் > இந்தியாமத்தியப்பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில், 42 வயது நபர் ஒருவர் ஒரே நேரத்தில் 3 பெண்களை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பொதுவாக, தற்போதைய காலகட்டத்தில் லிவிங் டுகெதர் என்ற வாரத்தை அதிகம் மக்கள் மத்தியில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
சமீபத்தில் கூட, தமிழகத்தின் மலைவாழ் கிராமம் ஒன்றில், திருமணத்திற்கு முன்பே, தங்களின் வருங்கால மனைவியுடன் லிவிங் டு கெதர் முறையில் வாழும் பழக்கம், பல ஆண்டுகளுக்கு முன்பில் இருந்தே கடைபிடித்து வந்ததாக தெரிய வந்த தகவல், பலரையும் வியப்பில் ஆழ்த்தி இருந்தது.
15 ஆண்டுகள் லிவிங் டு கெதர்..
அந்த வகையில், தற்போது ஒரு லிவிங் டு கெதர் பயணம், சுமார் 15 ஆண்டுகளுக்கு பிறகு திருமணத்தில் வந்து முடிந்துள்ளது. அதுவும் ஒரு பெண்ணுடன் அல்ல, மூன்று பெண்களுடன். மத்தியப்பிரதேச மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில் உள்ள நன்பூர் என்னும் பகுதியில் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர் சம்ரத் மவுரியா (வயது 42).
இவர் அக்கிராமத்தின் முன்னாள் பஞ்சாயத்து தலைவராகவும் இருந்துள்ளார். இவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு மூன்று பெண்களுடன் வெவ்வேறு காலகட்டத்தில் காதலித்து வந்துள்ளார். ஆனால், இதில் ஒருவருடன் மட்டும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும் கூறப்படுகிறது. 15 ஆண்டுகளாக, 3 பெண்களுடன் லிவிங் டு கெதர் வாழ்க்கை நடத்தி வந்த சம்ரத் மவுரியாவுக்கு, மொத்தம் 6 குழந்தைகளும் உள்ளனர்.
ஒரே நேரத்தில் திருமணம்
இந்நிலையில், வறுமை காரணமாக திருமணம் செய்யாமல் இருந்து வந்த சம்ரத், 15 ஆண்டுகளுக்கு பிறகு, தான் லிவிங் டு கெதர் முறைப்படி வாழ்ந்து வந்த மூன்று பெண்களுடனும் ஒரே நேரத்தில், மண்டபத்தில் வைத்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மூன்று பேரை ஒரே நேரத்தில் திருமணம் செய்து கொண்ட இந்த விழா, பழங்குடியினரின் முறைப்படி மூன்று நாட்கள் நடந்தது என்றும் கூறப்படுகிறது. இந்த மூன்று பெண்களும் 30 முதல் 35 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கல்யாணம் பண்ணிக்கிட்டா தான்..
வெகு விமரிசையாக நடைபெற்ற திருமண நிகழ்வு, சம்ரத்தின் கிராமத்தில் வைத்து கொண்டாடப்பட்டது. சாம்ராத் மற்றும் அவரின் மூன்று மனைவிகள் மூலம் பிறந்த ஆறு குழந்தைகளும் தங்கள் பெற்றோர்களின் திருமண நிகழ்வில் கலந்து கொண்டனர். இது பற்றி பேசிய சம்ரத், "பழங்குடி சம்பிரதாய முறைப்படி, மூன்று பேரையும் ஒரே இடத்தில் வைத்து நான் திருமணம் செய்து கொண்டேன். எங்களின் மரபுப்படி, ஒருவர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், சமூக நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாது. ஆனால், நான் இப்போது திருமணம் செய்து கொண்டதால் எனது சமூகத்தினர் என்னை அனைத்து விதமான சமூக நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள இனிமேல் அனுமதிப்பார்கள்.
அதே போல, எனது குழந்தைகளின் திருமணமும் இனி சமூகத்தின் முறைப்படி நடைபெறும்" என சம்ரத் மவுரியா தெரிவித்துள்ளார். சம்ரத் மற்றும் அவரது 3 மனைவிகளை, அக்கிராம மக்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
8 ஆவது Behindwoods Gold Medals விருதுகள் இந்த ஆண்டு சென்னை தீவுத்திடலில் உள்ள island மைதானத்தில் மே 15 மற்றும் 22 ஆகிய தேதிகளில் மாலை 6 மணி முதல் இரவு 11.30 மணி வரை நடக்க உள்ளது. இதற்கான டிக்கெட் முன்பதிவு தற்போது தொடங்கியுள்ளது.
நிகழ்ச்சி டிக்கெட் முன் பதிவு செய்யும் லிங்க். https://behindwoods.com/bgm8

மற்ற செய்திகள்
