VIDEO: 23-வது ஓவர் முடிஞ்சதும் TV-யில் ஓடிய ‘ஒரு’ வீடியோ.. உடனே 23 செகண்ட் கைதட்டிய வீரர்கள்.. லார்ட்ஸ் டெஸ்ட்டில் நெகிழ்ச்சி..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுமறைந்த ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் அஞ்சலி செலுத்தியது ரசிகர்களை நெகிழ்ச்சி அடைய வைத்துள்ளது.
இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி இன்று (02.06.2022) லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 132 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் அதிகபட்சமாகடி கிராண்ட்ஹோம் 42 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஜேம்ஸ் ஆண்டர்சன் மற்றும் மேட்டி பாட்ஸ் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளும், பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர். இதனை அடுத்து இங்கிலாந்து அணி தங்களது முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.
இந்த நிலையில் இப்போட்டியில் மறைந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில், போட்டியின் 23-வது ஓவர் முடிந்ததும், ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக இரு அணி வீரர்களும் வரிசையாக நின்றனர். உடனே மைதானத்தில் இருந்த பார்வையாளர்களும் நின்று, 23 விநாடிகள் கைத் தட்டி தங்களது அஞ்சலியை செலுத்தினர். அப்போது ஷேன் வார்னே குறித்த வீடியோ டிவியில் ஒளிபரப்பப்பட்டது.
This is great tribute by the authorities to Shane Warne, pausing the game for 23 seconds after 23rd over as his jersey number was 23. pic.twitter.com/HoexqD37MU
— Johns. (@CricCrazyJohns) June 2, 2022
ஷேன் வார்னே கடந்த மார்ச் மாதம் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது உலக கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது. அதனால் உலக கிரிக்கெட் அணிகள் ஷேன் வார்னேவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் இன்றைய இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியின் 23-வது ஓவர் முடிந்ததும் 23 நொடிகள் அனைவரும் கைதட்டி அஞ்சலி செலுத்தினர். ஷேன் வார்னே அணிந்திருந்த ஜெர்சியின் நம்பர் 23 என்பது குறிப்பிடத்தக்கது.