RRR Others USA

புதிய கேப்டன் ஜடேஜாவுக்கு.. ஒரு காலத்துல வார்னே கொடுத்த 'PUNISHMENT'.. "மனுஷன் இவ்ளோ 'STRICT'அ இருந்துருக்காரே"

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith Kumar V | Mar 25, 2022 03:41 PM

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஷேன் வார்னே, கடந்த மார்ச் 4 ஆம் தேதியன்று, மாரடைப்பு காரணமாக திடீரென உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

Kamran Akmal recalls warne punishment to ravindra jadeja

நண்பர்களுடன் விடுமுறையை கழிக்க சென்றிருந்த வார்னே, திடீரென தான் தங்கியிருந்த விடுதியில் இறந்து கிடந்துள்ளார்.

52 வயதில், யாரும் எதிர்பாராத வகையில், திடீரென வார்னேவுக்கு நேர்ந்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் பல கிரிக்கெட் பிரபலங்களையும் கடும் வேதனையில் ஆழ்த்தியிருந்தது.

கம்ரான் அக்மல் சொன்ன விஷயம்

தொடர்ந்து, வார்னேவுடன் கிரிக்கெட் ஆடிய போது, நடந்த சம்பவங்கள் பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், பல கருத்துக்களை உருக்கத்துடன் பகிர்ந்து கொண்டனர். அந்த வகையில், பாகிஸ்தான் அணி வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ள கருத்து ஒன்று தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

முதல் ஐபிஎல் கோப்பை

சுழற்பந்து வீச்சில் ஜாம்பவானான ஷேன் வார்னே, ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை முதல் சீசனில் (2008) இருந்து, 2011 ஆம் ஆண்டு வரை கேப்டனாக வழி நடத்தி இருந்தார். இதில், முதல் சீசனான 2008 ஆம் ஆண்டின் இறுதி போட்டியில், சென்னை அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கோப்பையைக் கைப்பற்றி இருந்தது.

தாமதமாக வந்த ஜடேஜா, யூசுப் பதான்

அப்போது ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றிருந்த வீரர்கள், ராஜஸ்தான் அணியில் நடந்த பல தருணங்களை பற்றி, ஒரு ஆவணப் படம் ஒன்றில், தற்போது மனம் திறந்துள்ளனர். இதில் பேசும் கம்ரான் அக்மல், "அப்போது ராஜஸ்தான் அணியில் இருந்த யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், பயிற்சிக்கு ஒருமுறை தாமதமாக வந்தனர். ஆனால், வார்னே எதுவும் சொல்லவில்லை. நானும் தாமதமாக தான் வந்தேன். ஆனால், அவர்களை போல தாமதமாக நான் வரவில்லை. இதனால் என்னை வார்னே ஒன்றும் செய்யவில்லை.

தண்டனை கொடுத்த வார்னே

தொடர்ந்து, பயிற்சியினை முடித்து விட்டு, மைதானத்தில் இருந்து நாங்கள் கிளம்பினோம். திரும்பி நாங்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்த போது, பேருந்தினை நிறுத்தும் படி ஓட்டுனரிடம் கூறினார் வார்னே. பிறகு, பயிற்சிக்கு தாமதமாக வந்த யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜாவிடம், 'நீங்கள் இரண்டு பேரும் நடந்து வாருங்கள்' எனக் கூறி தண்டனையை அளித்தார் வார்னே" என கம்ரான் அக்மல் தெரிவித்தார்.

ஜடேஜாவின் சாதனைகள்

தங்களின் ஹோட்டலுக்கு செல்ல சுமார் 2 கிலோமீட்டர் வரை இருந்துள்ள நிலையில், யூசுப் பதான் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர், பயிற்சிக்கு தாமதமாக வந்ததன் பெயரில், நடந்தே சென்றுள்ளனர். முன்னதாக, வார்னே இறந்த அடுத்த சில தினங்களில், இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில், 175 ரன்கள் அடித்து பல சாதனைகளை படைத்தார் ஜடேஜா.

புதிய கேப்டன்

'ராக்ஸ்டார்' என ஜடேஜாவை ஒருமுறை வார்னே குறிப்பிட்டிருந்த நிலையில், அவருக்கு பெருமை சேர்த்து விட்டதாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ட்வீட் செய்திருந்தது. அதே போல, சிஎஸ்கே அணியின் கேப்டனாக இருந்த தோனி, அதன் பதவியில் இருந்து விலகிய நிலையில், புதிய கேப்டனாக ஜடேஜா தற்போது நியமிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Tags : #RAVINDRA JADEJA #CHENNAI-SUPER-KINGS #SHANE WARNE #RAJASTHAN ROYALS #IPL 2008 #IPL 2022 #ரவீந்திர ஜடேஜா #ஷேன் வார்னே

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Kamran Akmal recalls warne punishment to ravindra jadeja | Sports News.