‘என்ஜினியர்ஸ்டே ஸ்பெஷல்’.. இந்திய அணியில் கலக்கிய என்ஜினியர்கள்..! யார் யார்னு தெரியுமா..?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுBy Selvakumar | Sep 15, 2019 10:35 PM
இந்தியா முழுவதும் பொறியாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியிலும் பொறியியல் படித்த வீரர்கள் விளையாடியுள்ளனர்.

இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான அனில் கும்ளே பெங்களூருவில் உள்ள பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்துள்ளார். இவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 619 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார். அதேபோல் இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது விளையாடி வரும் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ரவிசந்திரன் அஸ்வின் சென்னை எஸ்.எஸ்.என் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்ப பிரிவில் படித்துள்ளார். இவர் இந்திய அணிக்காக இதுவரை டெஸ்ட் போட்டிகளில் 342 விக்கெட்டுகளும், ஒருநாள் போட்டியில் 150 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கிண்டியில் உள்ள பொறியியல் கல்லூரியில் எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங் பிரிவில் படித்துள்ளார். மேலும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர்களான இஏஎஸ் பிரசன்னா, எஸ்.வெங்கட்ராகவன், பி.எஸ்.சந்திரசேகர் உள்ளிட்டோர் மைசூரில் உள்ள நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் பொறியியல் படித்துள்ளனர்.
