இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்...!

முகப்பு > செய்திகள் > உலகம்

By Issac | Feb 28, 2020 05:48 PM

1. சுட்டுக் கொல்லபட்ட களியக்காவிளை எஸ்.ஐ வில்சன் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணி வழங்கப்பட்டுள்ளது.

important-headlines-read-here-for-evening-february-28.html

2. மகாராஷ்டிராவில் அரசு கல்விநிறுவனங்களில் முஸ்லிம்களுக்கு 5 சதவீத இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில அமைச்சர் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.

3. ஈரானில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் 300 பேரை மீட்கக்கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

4. சிரியாவில் இட்லிப் மாகாணத்தில் அரசுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதலில் 33 துருக்கி ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

5. நடிகர் ரஜினிகாந்த் கட்சி துவங்கினால் அவருடனும் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

6. செங்கல்பட்டு மாவட்டம் பரனூர் சுங்கச்சாவடி மார்ச் 1ம் தேதி முதல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.கடந்த மாதம் 26ம் தேதி அரசு பேருந்து ஓட்டுனரை சுங்கச்சாவடி ஊழியர் தாக்கியதால் பரனூர் சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. மோதலால் இரு மாதமாக பரனூர் சுங்கச்சாவடி இயங்காமல் வாகனங்கள் கட்டணமின்றி இலவசமாக சென்று கொண்டிருந்தனர்.

7. ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹிமாசல பிரதேசத்தின் எல்லைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. வடக்குப்பகுதியில், 5 கி.மீ ஆழத்தில் மையமாககொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பிற்பகல் 2.42 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 3.1ஆக பதிவானதாக இந்திய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

8. டெல்லியில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மட்டும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், டெல்லி வன்முறை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக அதிகரித்துள்ளது.

9. பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஊடுருவும் நபர்கள் குறித்து தகவல் தெரிவித்தால், ரூ.5,000 சன்மானம் வழங்கப்படும் என மகாராஷ்டிராவில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.

10. தமிழ்நாட்டில் காசநோய் பாதிப்பு அதிகரித்துள்ளதாக மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.

Tags : #ONELINENEWS