“கரெண்ட் இல்லாமல் வாழ காரணம் என்ன”?... 79 வயது மூதாட்டி சொல்லும் பாய்ண்ட்!
முகப்பு > செய்திகள் > இந்தியாBy Arunachalam | May 08, 2019 08:07 PM
79 வயதான முன்னாள் பேராசிரியை ஒருவர், தற்போதுவரை தன் வீட்டீல் மின்சார வசதி செய்துகொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.
புனேவை சேர்ந்தவர் டாக்டர் ஹேமா சானே. 79 வயதான இவர், புனேவில் உள்ள கார்வேர் கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர், கடந்த 1940ம் ஆண்டில் இருந்து அதே பகுதியில் உள்ள தன் பெற்றோர் வசித்த அதே வீட்டிலேயே தனியாக வசித்துவருகிறார்.
இந்நிலையில், இவர் இயற்கை மீது கொண்ட தீராத காதல் காரணமாக இயற்கையோடு இணைந்து தன் வாழ்க்கையை கழிக்க எண்ணினார். இதன் காரணமாக, தன் வீட்டில் மின் இணைப்பு கொடுக்காமலேயே வாழ்ந்துவருகிறார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது, “மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டு சில வருடங்களே ஆகிறது. ஆனால், இயற்கையும் அதன் அழகும் பல நூறு வருடங்களாக இருக்கிறது. அதனால், அவற்றை பாழாக்க விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
மேலும், இயற்கை குறித்து பல புத்தகங்களை ஹேமா சானே எழுதியுள்ளார். இந்நிலையில், அவரைப் பற்றி யார் என்ன பேசினாலும் வருத்தப்படாமல் அவரது வீட்டை சுற்றியுள்ள பறவைகள் மற்றும் அவரது நண்பர்கள் என மகிழ்ச்சியுடன் தனது வாழ்நாளை கழித்து வருகிறார்.
இந்நிலையில், மின்சாரத்தின் தேவை மிக அதிகமாக இருக்கும் இந்த காலத்திலும் மின்சாரத்தின் உதவியே இல்லாமல் தன் வாழ்நாளை மிக மகிழ்ச்சியாக கழித்துவரும் இவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.