நெறைய ப்ளான்ஸ் இருக்கு...! 'அந்த விஷயத்த' மனசுல வச்சு தான் பவுலிங் போட போறேன்...! 'இப்படியெல்லாம் பேசிட்டு போனவரு...' - மூணு ஓவருலையே அள்ளி கொடுத்துட்டாரே...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு2021-ஆம் ஆண்டின் ஐபில் டி-20 கிரிக்கெட் தொடரில் இன்று (19-04-2021) சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்டிருக்கிறது.
இந்த 14-வது ஐபிஎல் சீசன் இதுவரை 11 லீக் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதலிட்டத்தில் இருக்கிறது. இதையடுத்து இரண்டாவது இடத்தில் டெல்லி அணியும், மூன்றாவது இடத்தில் மும்பை அணியும் இருக்கிறது.
அதோடு, இன்று போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல் அணியும் டாஸ் போட்டதில், டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல் கேப்டன் சஞ்சு சாம்சன் முதலில் பவுலிங் தேர்வு செய்துள்ளார்.
முதல் ஆட்டம் முடிவடைந்த நிலையில் சென்னை அணி 20 ஓவரில் 188/9 என்று தன்னுடைய ஆட்டத்தை அதிரடியாக முடித்தது.
தற்போது ராஜஸ்தான் ராயல் அணி ஆடி வரும் நிலையில், போட்டி தொடங்கும் தீபக் சஹார் செய்தியாளர்களிடம் தங்கள் அணிக்குறித்தும், டெல்லி மைதானம் குறித்தும் கூறியுள்ளார்.
அதில், 'முதல் போட்டியில் டெல்லிக்கு எதிராக இந்த மைதானத்தில் விளையாடிய போது பந்து ஸ்விங் ஆகவில்லை. அதுவே எங்களுக்கு மிகுந்த தடையாக இருந்தது. அதை மனதில் வைத்து, அதற்கு தகுந்தவாறு இன்று பந்துவீச வேண்டும் என முடிவெடுத்துள்ளோம்.
இந்த ஆட்டத்தில் எங்களிடம் நிறைய திட்டங்கள் இருக்கிறது. ஆனால் மேலும் ஒரு தொந்தரவாக பனி உள்ளது. பனியால் நேற்றயை போட்டியில் நிறைய புல் டாஸ் பந்துகளை பார்த்தோம். யார்க்கர் பந்துகளை வீசுவது கடினமாக இருக்கும்.
எங்களுடைய இப்போதைய திட்டம், பீல்டிங் மற்றும் பேட்ஸ்மன்களுக்கு தகுந்தவாறு மட்டுமே வீச வேண்டும். முதல் போட்டியில் விக்கெட் எடுத்த கஷ்டமாக இருந்தது ஆனால் கடைசி வரை டெல்லி அணிக்கு அழுத்ததை ஏற்படுத்தினோம். இது எங்களுக்கு மோட்டிவேசனாக இருந்தது' எனக் கூறியுள்ளார் தீபக் சஹார்.
தற்போது வரை ராஜஸ்தான் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 84 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதுவரை மூன்று ஓவர் பவுலிங் போட்ட தீபக் சஹார் விக்கெட் எதுவும் எடுக்காமல் 32 ரன்கள் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.