'தோனி'யை குறிப்பிட்டு ராஜஸ்தான் அணி போட்ட 'ட்வீட்'!.. "இன்னைக்கி இதான் செம 'டிரெண்டிங்' போங்க.." கொண்டாடித் தீர்த்த 'சிஎஸ்கே' ரசிகர்கள்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டு14 ஆவது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில், தோனி (Dhoni) தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் (RR) அணியும் மோதுகின்றன.

சென்னை அணி, இதுவரை விளையாடியுள்ள இரண்டு போட்டிகளில் ஒன்றில் வெற்றி கண்டுள்ளது. மறுபக்கம், ராஜஸ்தான் அணியும், இரண்டு போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி கண்டுள்ளது. இதனால், இன்று வெற்றி பெறும் அணி, புள்ளிப் பட்டியலில் நிச்சயம் முன்னேற்றம் காணலாம்.
இதில், ராஜஸ்தான் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சன் (Sanju Samson), முதல் முறையாக பொறுப்பேற்றுள்ளார். இளம் வீரரான சாம்சனுக்கு, ராஜஸ்தான் அணி நிர்வாகம், இந்த வாய்ப்பை வழங்கியுள்ள நிலையில், அந்த அணியிலும் துடிப்பான இளம் வீரர்கள் பலர் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ராஜஸ்தான் அணி ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று, ராஜஸ்தான் ரசிகர்கள் மட்டுமில்லாது, சென்னை ரசிகர்களையும் அதிகமாக குதூகலப்படுத்தியுள்ளது.
From the screen to the field. Tonight. 🙌 #CSKvRR | #HallaBol | #IPL2021 pic.twitter.com/gCNF9iGfsn
— Rajasthan Royals (@rajasthanroyals) April 19, 2021
குல்திப், ஜெய்ஸ்வல், சக்காரியா, ஆகாஷ், ராவத் என ராஜஸ்தான் அணியில் இடம்பெற்றுள்ள இளம் வீரர்கள், ராஜஸ்தான் அணியின் ஜெர்சியை அணிந்து கொண்டு, தங்களது குழந்தை பருவத்தில் உள்ளது போல இருக்கும் நிலையில், அனைவருமாக சேர்ந்து டிவி ஒன்றில், தோனியின் பேட்டிங்கை கண்டு களிப்பது போல இந்த புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
சிறு வயது முதலே, தோனியின் பேட்டிங்கை பார்த்து வளர்ந்து, தங்களை கிரிக்கெட் துறையில் மேம்படுத்திக் கொண்ட இளம் வீரர்கள், தற்போது தோனிக்கு எதிராக இன்றைய போட்டியில் களமிறங்கவுள்ள நிலையில், ராஜஸ்தான் அணியின் இந்த அசத்தல் 'ட்வீட்', ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

மற்ற செய்திகள்
