ஏம்பா...! 'உன்ன நம்பி ஆட வச்சதுக்கு...' என்ன பண்ணணுமோ 'அத' பண்ணிட்ட...! 'போட்டிக்கு முன்னாடி தோனி நம்பிக்கையோட சொன்ன விஷயம்...' - ஆனா கொஞ்ச நேரத்துலையே சல்லிசல்லியா நொறுக்கிட்டீங்களே...!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Issac | Apr 19, 2021 10:07 PM

இன்றைய (19-04-2021) போட்டியில் சிஎஸ்கே மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன. இந்த இரண்டு அணிகளுமே இந்த சீசனின் முதல் போட்டியில் தோற்று, இரண்டாவது போட்டியில் வெற்றி வாகை சூடி முனைப்போடு விளையாடி வருகின்றது.

Dhoni said ruturaj gaikwad out good ball is not a problem.

முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 9 விக்கெட் இழப்பிற்கு, 188 ரன்கள் எடுத்தது. தற்போது ராஜஸ்தான் அணி ஒரு விக்கெட் இழந்து 35 ரன்களுடன் களத்தில் உள்ளது.

Dhoni said ruturaj gaikwad out good ball is not a problem.

மும்பை வான்கடேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்றபோது டோனி பேசினார், அப்போது,  சிஎஸ்கே அணியின் இளம் தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், முதல் இரு போட்டிகளிலும் சரியாக விளையாடவில்லை என்றாலும், அவர் மீது நம்பிக்கை வைத்து மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

Dhoni said ruturaj gaikwad out good ball is not a problem.

இந்த சீசனை சரியாக தொடங்காத ருதுராஜ் கெய்க்வாட் குறித்து பேசிய சிஎஸ்கே கேப்டன் தோனி, நல்ல பந்தில் அவுட்டாவது பிரச்னையில்லை. முதல் போட்டியில் சாதாரண பந்தில் அவர் விக்கெட் ஆகவில்லை.  பயிற்சியாளராக ஆதரவுதான் அளிக்க முடியும். களத்தில் அவர் தான் சிறப்பாக விளையாட வேண்டும் என்று தோனி தெரிவித்தார்.

Dhoni said ruturaj gaikwad out good ball is not a problem.

தொடர்ந்து சென்னை அணியில் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களம் இறங்கிய ருதுராஜ் 13 பந்துகளில் வெறும் 10 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். பெரிதும் எதிர்பார்த்து டோனி பேசிய சிறிது நேரத்துலையே அவரது எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கை தவிடு பொடியானது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Dhoni said ruturaj gaikwad out good ball is not a problem. | Sports News.