எங்கள அப்படிலாம் குறைச்சு மதிப்பிடாதீங்க...! ஆனா 'அவரு' இல்லாதது எங்களுக்கு பின்னடைவு தான்...! - பிளெம்மிங் கருத்து...!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக சிஸ்கே விளையாடிய நேற்றைய போட்டியில் வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாததால், விக்கெட் எடுக்க முடியாமலும், ரன்களைக் கட்டுப்படுத்த முடியாமலும் சிஎஸ்கே திணறி வெற்றிவாய்ப்பை இழந்தது.

இந்த நிலையில் பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடர் போட்டிகளில் விளையாடிக் கொண்டிருந்த லுங்கி இங்கிடி இன்னும் தொடர் முடியாத நிலையில், பாதியிலேயே ஐபிஎல்-இல் ஆடுவதற்கு வந்துள்ளார். தற்போது தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதால், அவர் அடுத்த போட்டியிலும்விளையாட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில், லுங்கி இங்கிடி வந்தவுடன் அவர் தனிமைப்படுத்திக்க கொள்ள வேண்டும் என்பதால், அடுத்த போட்டியிலும் விளையாட முடியாது. ஹேசல்வுட் இந்தத் தொடரில் விளையாடுவார் என நம்பிக்கையோடு இருந்தோம், ஹேசல்வுட் இல்லாதது சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய பின்னடைவுதான்.
ஹேசல்வுட்டுக்கு பதில் சேர்க்கப்பட்டுள்ள பெஹரன்டார்ஃப் வந்தாலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருப்பதால், அவரும் அடுத்த போட்டியில் விளையாட முடியாத சூழல் நிலவுகிறது. அதுவரை இந்தியப் பவுலர்ஸ், சாம்கரன் ஆகியோரை வைத்துத்தான் சமாளிக்க வேண்டியது உள்ளது.
அடுத்த நான்கு போட்டிகளில் நாங்கள் இன்னும் அதிகமானவற்றை கற்றுக்கொள்வோம். அதேசமயம் எங்கள் அணியில் மாற்றத்தை உருவாக்க எத்தனை போட்டிகள் தேவைப்படும் என்பது குறித்து குறைத்துமதிப்பிடாதீர்கள் என்று பிளெம்மிங் கூறியுள்ளார்.

மற்ற செய்திகள்
