"இது ஒண்ணு போதுமே.. பல நாளுக்கு இத 'டிரெண்ட்' பண்ணிடுவோம்.." போட்டிக்கு நடுவே 'பிராவோ' செய்த 'செயல்'.. கொண்டாடித் தீர்த்த 'ரசிகர்கள்'!.. 'வைரல்' வீடியோ!!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Ajith | Apr 16, 2021 11:25 PM

14 ஆவது ஐபிஎல் சீசனில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, தங்களது இரண்டாவது லீக் போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் அணியை இன்று எதிர்கொண்டனர்.

bravo dances vaathi coming step in between match against punjab

இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணிக்கு, சென்னை பவுலர்கள் சிம்ம சொப்பனமாக விளங்கினர். தொடக்க முதலே, அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பஞ்சாப் அணி தடுமாறியது. சென்னை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், 4 ஓவர்கள் பந்து வீசி 13 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.

bravo dances vaathi coming step in between match against punjab

20 ஓவர்கள் முடிவில், பஞ்சாப் அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. தொடர்ந்து இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணி, 16 ஓவர்களில் இலக்கை எட்டி, 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இந்த சீசனின் முதல் வெற்றியை சென்னை அணி பதிவு செய்தது. இதனிடையே, பஞ்சாப் அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது, சென்னை வீரர் பிராவோ (Bravo) செய்த செயல் தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள், தற்போது அதிகம் வைரலாகி வருகிறது.

bravo dances vaathi coming step in between match against punjab

பஞ்சாப் அணியின் முருகன் அஸ்வின் விக்கெட்டை வீழ்த்திய பிராவோ, விக்கெட்டை எடுத்த குஷியில், மைதானத்திலேயே வைத்து 'வாத்தி கம்மிங்' நடனத்தை ஆடிக் காட்டினார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியான 'மாஸ்டர்' திரைப்படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் பட்டி தொட்டியெங்கும் ஹிட்டடித்திருந்தது.

 

இந்த பாடலிற்கு கிரிக்கெட் வீரர்கள் அஸ்வின், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட பல வீரர்கள் நடனமாடி அசத்தியிருந்தனர். இந்திய வீரர்களை போலவே வெளிநாட்டு வீரர்களான வார்னர், ஸ்மித், ரஷீத் கான் உள்ளிட்ட வீரர்கள் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி இருந்ததும் வேற லெவலில் வைரலாகி இருந்தது.

 

இதனைத் தொடர்ந்து, இன்றைய போட்டியில், மைதானத்தில் வைத்தே பிராவோ போட்ட டான்ஸ் தொடர்பான பதிவுகளை விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாது, சிஎஸ்கே ரசிகர்களும் அதிகம் கொண்டாடி வருகின்றனர்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்

ABOUT THIS PAGE

This page contains news relating to various facts and events. The views are generally about current affiars and general topics in diversified areas such as political, international, national, and regional issues, sports, health, travel, lifestyle, technology and business. People having similar interets on the above topics will find this page useful. Bravo dances vaathi coming step in between match against punjab | Sports News.