"பெரிய மீன் சிக்கிடுச்சுன்னு".. தூண்டிலை இழுத்த மீனவர்.. கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி.. திகிலூட்டும் பின்னணி!!
முகப்பு > செய்திகள் > உலகம்தாய்லாந்து நாட்டில் ஆறு ஒன்றில் மீன் பிடிக்க போன நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று தற்போது பலரையும் திடுக்கிட வைத்துள்ளது.

தாய்லாந்தின் Phitsanulok என்னும் பகுதியில் ஆறு ஒன்று அமைந்துள்ளது. அங்கே வழக்கம் போல ஒரு மீனவர் மீன் பிடிக்க சென்றதாக தகவல்கள் கூறுகின்றது.
அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் அந்த நபர் வழக்கம் போல மீன் பிடிக்கவும் அந்த ஆற்று பகுதிக்கு வந்துள்ளார்.
அப்போது வழக்கம் போல தூண்டிலை அந்த நபர் நீரில் போட்டு மீன் சிக்குவதற்காகவும் காத்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது, வலையில் ஏதோ தட்டுப்பட பெரிய மீன் சிக்கி இருக்கலாம் என்றும் அவர் கருதி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆனால், அங்கே என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டதும் ஒரு நிமிடம் ஆடி போயுள்ளார் அந்த மீனவர்.
அந்த நபரின் தூண்டிலில் மீனுக்கு பதிலாக இளம் பெண்ணின் உடல் ஒன்று சிக்கி உள்ளது. அதனை மெல்ல மெல்ல கரைக்கு அருகே சேர்த்த அந்த மீனவர், உடனடியாக போலீசாருக்கு அழைத்து தகவலை தெரிவித்துள்ளார். உடனடியாக, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடலை போலீசார் மீட்டுள்ளனர். அவர்கள் நடத்திய விசாரணையில், ஒரு சில தினங்களுக்கு முன் காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சுனித் என்பதையும் அவர்கள் உறுதி செய்துள்ளனர்.
இது தொடர்பாக மாணவி சுனித்தின் நண்பர் ஒருவர் தெரிவிக்கையில், சம்பவத்தன்று வெளியே சென்று விட்டு நண்பர்களுடன் பிக்கப் ட்ரக் ஒன்றில் மாணவி சுனித் வந்து கொண்டிருந்ததாகவும், அப்போது குறிப்பிட்ட ஆற்றின் அருகே அமைந்துள்ள பாலத்தில் வரும் போது வாகனத்தில் இருந்து ஆற்றில் அவர் குதித்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த நண்பர்கள், அவர் குதித்த பகுதியைத் தேடியதாகவும் ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
அப்படி ஒரு சூழலில் தான், ஆற்றில் குதித்த மாணவி தற்போது மீனவர் தூண்டில் வலையில் சிக்கி உள்ளார். இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், எந்த காரணத்திற்காக மாணவி அப்படி செய்திருப்பார் என்பதை அறியும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மற்ற செய்திகள்
