‘ஷமி காலைத் தொட்டு கும்பிட்ட சாகர்’!.. மைதானத்தில் நடந்த ‘நெகிழ்ச்சி’ சம்பவம்.. வைரலாகும் போட்டோ..!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாகர், பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் முகமது ஷமியின் காலை தொட்டு வணங்கிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
![Deepak Chahar touched feet of Mohammed Shami before match against PBKS Deepak Chahar touched feet of Mohammed Shami before match against PBKS](http://tamil.behindwoods.com/news-shots-tamil-news/images/sports/deepak-chahar-touched-feet-of-mohammed-shami-before-match-against-pbks.jpg)
நடப்பு ஐபிஎல் தொடரின் 8-வது போட்டி நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி, 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக இளம்வீரர் ஷாருக் கான் 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து அவுட்டாகினர். சென்னை அணியைப் பொறுத்தவரை தீபக் சாகர் 4 விக்கெட்டுகளும், பிராவோ, மொயின் அலி மற்றும் சாம் கர்ரன் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
இதனை அடுத்து விளையாடிய சென்னை அணி, 15.4 ஓவர்களில் 107 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் அதிகபட்சமாக மொயின் அலி 46 ரன்களும், டு பிளெசிஸ் 36 ரன்களும் அடித்தனர்.
Caption this 🤔#IPL2021 #PBKSvCSK #CSK #PBKS pic.twitter.com/zVW1TgEcAW
— Cricbuzz (@cricbuzz) April 17, 2021
போட்டி ஆரம்பிக்கும் முன் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரும், பஞ்சாப் அணியின் சார்பாக விளையாடும் முகமது ஷமியின் காலைத் தொட்டு, சிஎஸ்கே வீரர் தீபக் சாகர் வணங்கினார். இந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இப்போட்டியில் பஞ்சாப் அணியின் மயங்க் அகர்வால் (0), கிறிஸ் கெய்ல் (10), தீபக் ஹூடா (10) மற்றும் நிக்கோலஸ் பூரான் (0) ஆகிய நான்கு பேரும் தீபக் சாகரின் ஓவரில் அவுட்டாகினார். இது போட்டியில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
![](https://www.behindwoods.com/images/spacer.gif)
மற்ற செய்திகள்
![](https://www.behindwoods.com/images/spacer.gif)