'கேலி... கிண்டல்... புறக்கணிப்பு'!.. அவமானங்கள் அனைத்தையும்... ஒரே மேட்ச்சில் அடித்து நொறுக்கிய உனட்கட்!.. ப்பா!.. பின்னணியில் 'இப்படி' ஒரு காரணமா?
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு உனட்கட் முக்கியமான காரணமாக இருந்துள்ளார்.

ராஜஸ்தான் மற்றும் டெல்லி இடையிலான போட்டி விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. கடைசி வரை த்ரில்லாக சென்ற இந்த போட்டியில் ராஜஸ்தான் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
முதலில் களமிறங்கிய டெல்லி அணி 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தது. அதன்பின் களமிறங்கிய ராஜஸ்தான் 19.4 ஓவரில் இலக்கை எட்டி வெற்றிபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் அணியில் பவுலிங் செய்த உனட்கட் பிளேயர் ஆப் தி மேட்ச் விருது வாங்கினார்.
இவர் எடுத்த மூன்று விக்கெட்டுகள்தான் மொத்தமாக ஆட்டத்தையே மாற்றியது. தொடக்கத்திலேயே இவர் டெல்லி ஒப்பனர்களை அடுத்தடுத்து விக்கெட் எடுத்து ஆட்டத்தை ராஜஸ்தான் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.
ஷிகர் தவான், ப்ரித்வி ஷா, ரஹானே என மூன்று முக்கியமான வீரர்களின் விக்கெட்டையும் இவர்தான் எடுத்தார். 4 ஓவரில் வெறும் 15 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடந்த சீசன்களில் உனட்கட் சரியாக பவுலிங் செய்யவில்லை. 3 வருடங்களாக இவர் மோசமாக சொதப்பி வந்தார். 2018ல் 11.50 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்ட இவர் சரியாக ஆடவில்லை. அந்த தொடரில் 9 ஆர்ஆர் வைத்து இருந்தார்.
அதன்பின் 2019ல் இவர் 8.40 கோடி ரூபாய்க்கு அதே ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார். பின்னர் 2020ல் 3 கோடிக்கு மீண்டும் ராஜஸ்தான் அணியால் எடுக்கப்பட்டார்.
ஒவ்வொரு வருடமும் ராஜஸ்தான் அணியால் இவர் எடுக்கப்பட்டாலும் கூட, பெரிய அளவில் இவருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை. நிறைய போட்டிகள் சொதப்புவார். அவ்வளவுதான் அதன்பின் இவருக்கு வாய்ப்பு கிடைக்காது. இவருக்கு தனி முக்கியத்துவம் எதுவும் கொடுக்கப்படவில்லை. ஏதோ இவரும் அணியில் இருக்கிறார் என்று ராஜஸ்தான் அணி நிர்வாகம் கருதும் அளவிற்கு இவரின் ஆட்டம் இத்தனை வருடம் மோசமாக இருந்தது.
ஆனால், நேற்று ஒரே போட்டியில் இந்த விமர்சனங்கள் அனைத்திற்கும் பதிலடி கொடுத்துள்ளார். ஒரே போட்டியில் தன்னுடைய மதிப்பை உணர்த்தி உள்ளார். நான் இவ்வளவு கோடிக்கு தகுதியானவன்தான் என்று உனட்கட் நிரூபித்துள்ளார்.
எல்லா புறக்கணிப்பிற்கும், விமர்சனங்களுக்கும், இணைய கிண்டல்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக இந்த போட்டியில் இவரின் பவுலிங் வித்தியாசமாக இருந்தது. இவர் நேற்று மும்பை பிட்சை நன்றாக பயன்படுத்திக்கொண்டார். பந்து பவுன்ஸ் ஆகிறது, வேகமாக செல்கிறது என்பதை உணர்ந்து கொண்டு பவுலிங் செய்தார். நிதானமாக சிந்தித்து, சரியான திட்டமிடலுடன் டெல்லி அணியின் டாப் ஆர்டர் விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.

மற்ற செய்திகள்
