'இந்த பார்வைக்கு என்ன அர்த்தம்னு அப்போ புரியல... இப்ப புரியது'!.. டெல்லி அணியின் வெற்றியை... நூலிழையில் தட்டிப் பறித்த மோரிஸ்!.. திக் திக் சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுடெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றது. அதற்கு மிக முக்கிய காரணமாக ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் பங்காற்றியுள்ளார்.
முதலில் ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் 148 ரன்களை எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19.4 ஓவரில் அதிரடியுடன் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
டெல்லி அணியில் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் - ப்ரித்வி ஷா களமிறங்கினர். ஆனால் தொடக்கமே அந்த அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ஷிகர் தவான் (9), ப்ரித்வி ஷா (2), ரஹானே (8) மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் (0) எடுத்து வெளியேறினர்.
இதனால் 37 ரன்களுக்குள் 4 விக்கெட்களை இழந்து டெல்லி அணி தடுமாறி வந்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் பொறுப்புடன் ஆடி அணியை மீட்டார். அறிமுக வீரர் லலித் யாதவுடன் ஜோடி சேர்ந்த அவர் 32 பந்துகளில் 51 ரன்களை எடுத்து ரன் அவுட் ஆனார். அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய லலித் யாதவ் 20 ரன்களை எடுத்தார்.
பின்னர் வந்த வீரர்கள் டாம் கரன் (20) கிறிஸ் வோக்ஸ் (15) அஸ்வின் (7), ரபாடா (9) ரன் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 8 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்களை எடுத்தது.
148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் அணியும் டெல்லி அணியை போலவே தொடக்கத்திலேயே அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறியது. தொடக்க வீரர்கள் ஜாஸ் பட்லர் (2), மன்னன் வோஹ்ரா (9) ரன்களுக்கு வெளியேறி அதிர்ச்சியளித்தனர்.
பின்னர் களமிறங்கிய கேப்டன் சஞ்சு சாம்சன் (4), சிவம் தூபே (2) டெல்லி அணி பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் வெளியேறினர். நீண்ட போராத்திற்கு பிறகு ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர், ராகுல் திவாட்டியா அணியின் ஸ்கோரை சீராக உயர்த்தினர். சிறப்பாக விளையாடிய டேவிட் மில்லர் 43 பந்துகளில் 62 ரன்களை விளாசி திடீரென அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். மீண்டும் மேட்ச் டெல்லி கேபிடல்ஸ் பக்கம் சாய்ந்தது.
அந்த நேரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், ஆல்ரவுண்டர் கிறிஸ் மோரிஸ் அதிரடி காட்ட கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணிக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. டாம் கரன் வீசிய ஓவரை கிறிஸ் மோரிஸ் துவம்சம் செய்ததால் 19.4 ஓவர்களில் 150 ரன்களை எடுத்து ராஜஸ்தான் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.