‘ஒரே ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரி’.. பாகிஸ்தான் பௌலரை கதறவிட்ட பிரபல வீரர்..! வைரலாகும் வீடியோ..!

முகப்பு > செய்திகள் > விளையாட்டு

By Selvakumar | Aug 05, 2019 11:11 AM

பாகிஸ்தான் பந்து வீச்சாளர் வீசிய ஒரு ஓவரில் கிறிஸ் கெய்ல் 32 ரன்கள் அடித்து அசத்தினார்.

WATCH: Gayle smashes 32 runs off Shadab Khan’s over in Global T20

கனடாவில் குளோபல் டி20 லீக் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் வான்கவுவர் நைட்ஸ் மற்றும் எட்மொண்டன் ராயல்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு இடையேயான போட்டி ப்ராம்டன் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த எட்மொண்டன் ராயல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக பென் கட்டிங் 72 ரன்களும், முகமது நவஸ் 40 ரன்களும் எடுத்தனர்.

இதனை அடுத்து பேட்டிங் செய்த வான்கவுவர் நைட்ஸ் அணி 16.3 ஓவர்களின் முடிவில் 166 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்ல் ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தார். பாகிஸ்தான் வீரர் ஷடாப் கான் வீசிய 13 -வது ஓவரில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடித்து விளாசினார். மொத்தமாக 44 பந்துகளில் 94 ரன்கள் அடித்து அணியின் வெற்றி கெய்ல் அடித்தளமிட்டார்.

Tags : #GLOBAL T20 #GAYLE #SHADAB KHAN #VANCOUVER KNIGHTS #EDMONTON ROYALS #ERVSVK #GT2019