472 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ராணி எலிசபெத்துக்கு பிடிச்ச பிங்க் வைரம்.. அப்படி என்ன ஸ்பெஷல்!
முகப்பு > செய்திகள் > உலகம்பூமிக்கடியில் அதிக அழுத்தத்தின் காரணமாக உருவாகும் வைரங்கள் இயற்கையாகவே அதிக கடினத்தன்மை கொண்டவையாகும்.
இவை பட்டை தீட்டப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு விற்பனை செய்யப்பட்டுவருகின்றன. இவை புதைந்துள்ள மண்ணில் இருக்கும் ரசாயனங்களின் அடிப்படையில் இவற்றின் வண்ணமும் மாறுபடும்.
உதாரணமாக பிங்க், நீல நிற வைரங்கள் அதிகளவு விற்பனை செய்யப்படுகின்றன.
ஹாங்காங்கில் ஒரு இளஞ்சிவப்பு வைரம் $49.9 மில்லியனுக்கு விற்கப்பட்டுள்ளது. 11.15 காரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் என்ற இந்த வைரம், Sotheby's Hong Kong நிறுவனம் மூலம் ஏலத்தில் விடப்பட்டது.
இந்த வைரம் $392 மில்லியன் ஹாங்காங் டாலர்களுக்கு ($49.9 மில்லியன்) ஏலம் போயுள்ளது. $21 மில்லியன் என மதிப்பிடப்பட்டு 49.9 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு ஏலம் போயுள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் 472 கோடி ரூபாய் ஆகும்.
வில்லியம்சன் பிங்க் ஸ்டார், என்ற பெயரில் இரண்டு வைரங்கள் உள்ளன. முதலாவது 23.60 காரட் வில்லியம்சன் வைரம், 1947 இல் சமீபத்தில் மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்க்கு திருமண பரிசாக வழங்கப்பட்டது.
ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு மிகவும் பிடித்த வைரமாக இந்த வைரம் இருந்துள்ளது.
இரண்டாவது 59.60 காரட் பிங்க் ஸ்டார் வைரம் 2017 இல் ஏலத்தில் $71.2 மில்லியனுக்கு விற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்போது ஏலத்தில் விடப்பட்ட 23.60 காரட் வில்லியம்சன் பிங்க் ஸ்டார் வைரம், இரண்டாவது பெரிய இளஞ்சிவப்பு வைரமாகும்.
இளஞ்சிவப்பு வைரங்கள் வண்ணமயமான வைரங்களில் மிகவும் அரிதானவை மற்றும் மிகவும் மதிப்புமிக்கவை. உலகின் மிக உயர்ந்த தரமான சில வைரங்களின் விலை கடந்த 10 ஆண்டுகளில் இரட்டிப்பாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.