சிராஜ் பண்ண விஷயத்தால.. கடுப்பான தீபக் & ரோஹித்..?? பரபரப்பை கிளப்பிய சம்பவம்!!
முகப்பு > செய்திகள் > விளையாட்டுஇந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த டி 20 தொடர், நேற்று முடிவடைந்தது.

3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 2 - 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தி இருந்தது.
முதல் இரண்டு போட்டிகளை இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றி இருந்த நிலையில், மூன்றாவது டி 20 போட்டியில், இரு அணிகளும் நேற்று (04.10.2022) மோதி இருந்தது.
இந்த போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. அதன்படி ஆடிய தென் ஆப்பிரிக்க ஆணி, ஆரம்பத்தில் இருந்தே அதிரடியாக ஆடி ரன் குவித்தது. ரைலி ரூசோ கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 100 ரன்கள் எடுத்திருந்தார். டி காக்கும் தனது பங்கிற்கு 68 ரன்கள் சேர்க்க, தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில், 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 227 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து, கடின இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி, ஆரம்பத்தில் இருந்தே அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. தினேஷ் கார்த்திக் 21 பந்துகளில் 46 ரன்கள் எடுத்து அவுட்டானார். இறுதியில் தீபக் சாஹரும் ஓரளவுக்கு அதிரடி காட்டினார். இருந்த போதும், மற்ற வீரர்கள் ரன் சேர்க்காததால், 19 ஆவது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இந்திய அணி, 178 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இதனால், தென் ஆப்பிரிக்க அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒரு நாள் போட்டி தொடர், அக்டோபர் 06 ஆம் தேதி ஆரம்பமாகிறது. இதனிடையே, மூன்றாவது டி 20 போட்டியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பான வீடியோ ஒன்று, இணையத்தில் அதிகம் பரபரப்பை உண்டு பண்ணி உள்ளது.
தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்து கொண்டிருந்த போது கடைசி ஓவரில் களமிறங்கிய டேவிட் மில்லர், 5 பந்துகளில் 3 சிக்ஸர்களுடன் 19 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது, அவர் அடித்த சிக்ஸர் ஒன்றை பவுண்டரி லைன் அருகே நின்ற சிராஜ், கேட்ச் எடுத்தார். ஆனால், மறுநொடியில் அவர் பவுண்டரி லைனையும் மிதித்து விட்டார். இதனால், சிக்ஸராகவும் அது மாறி இருந்தது.
இதனை பார்த்ததும் கடைசி ஓவரை வீசிக் கொண்டிருந்த தீபக் சாஹர், கோபத்தில் சில வார்த்தைகளை சிராஜை பார்த்து பேசினார். அதே போல, கேப்டன் ரோஹித் ஷர்மாவும் சிராஜை கோபத்துடன் முறைத்து பார்த்தார். முன்னதாக, ரைலி ரூசோ 24 ரன்களில் இருந்த போது, அவரது கேட்ச் ஒன்றையும் சிராஜ் தவற விட்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ரூசோ சதமடித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
Also Read | "தம்பி கோட்டுக்கு உள்ள வாங்க.. செஞ்சிட போறேன்".. SA வீரருக்கு சஹார் கொடுத்த வார்னிங்.. சேட்டையான வீடியோ..!

மற்ற செய்திகள்
